பட்டிக் குடிக்காடு ஆர் கோவிந்தராசு
(1) " பாளையக்காரர் வரலாறு "மற்றும் வாழ்க்கை வரலாறு "
இந்தியாவில் பாளையக்காரர்கள் வாழ்ந்த காலங்கள் கி.பி.1600-லிருந்து கி.பி 1852 க்கு இடைப்பட்டகாலங்களில் ஆட்ச்சிபுரிந்ததாகவும்மேலும் வரலாற்று வட இந்தியாவை முகலாயர்களும்,தென் இந்தியாவை பாளையக்காரர்கள் ஆட்ச்சி புரிந்ததாகவும் வரலாறு கூறுகின்றது.
இதன் வரைப்படம் பூகோள ரீதியாக 1700கி பி யில் இந்திய நாட்டின் ஆட்ச்சியாளர்கள் பற்றி தெரவிக்கப்பட்டுள்ளது.அப்போது நமது இந்திய நாடு பல ராஜ்யங்களாக இல்லாமல் வட இந்தியா,தென்இந்தியா,
கிழக்கிந்தியா,மேற்கிந்தியா,என திசைகள் வாரியாகவும்,மொழி வாரியாகவும்
பட்டனங்களாகவும் ,பிரிக்கப்பட்டு ஆட்ச்சி நடத்தப்பட்டுள்ளது
.
நமது இந்திய வரலாற்றை நன்கு அறிந்த மேதைகளும்,
அறிஞசர்களும்.சிறப்புமிக்க புவியியல் வல்லுனர்களும்,ஏராளமானோர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நான் எழுதி யுள்ளது நான் அடுத்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டவையும்,அனுபவ ரீதியாகவும் தெரிந்தவரையில் இதில் சமர்ப்பித்துள்ளேன்.குறைகள் இருப்பின் பகிர்ந்துக்கொள்ளவும் நான் வேண்டிக்கொள்கின்றேன்.
உலகத்தில் எந்த தேசத்திலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு நமது இந்திய புவியியல் வரலாற்று க்கு மிகப்பெரும் தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் நமது இந்திய நாட்டை அரசாட்சி புரிந்தவர்கள் ராஜாக்கள் ஆவார்கள் .அவர்களையே ஒவ்வொரு ராஜ்யங்களிலும்,பல இடங்களில் ராஜாக்கள் என்றும்,பாளையக்காரர் என்றும்,அழைக்கப்பட்டார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் சில இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார்கள்.அதாவது பாலிகர், என்றும் அழைக்கப்பட்டார்கள்.
மேலும்,பாளையக்காரர்கள் பெயர்கள் பின்வருமாறு காணலாம் . 1) தீரன் சின்னமலை, 2)நாகலாபுரம் எரியப்பா நாயக்கா,3)காதல்குடி, 4)சிவகிரி வன்னியர் படையாச்சி,5)அழகாபுரி வன்னியர் படையாச்சி, 6)எழாயிராம் பன்னல் வன்னியர் படையாச்சி,7)உடையார்பாளையம் சமஸ்தான வன்னியர் படையாச்சி, 8)அரியலூர் மழவராயர், 9)பிச்சாவரம் ஜமிந்தார், 10)மதகரி நாயக்கா, 11)ராஜா வெங்கடப்பா நாயக்கா,12)உய்யலவாடா நரசிம்மா ரெட்டி, 13)சப்தூர் நாகயசாமி கமைய நாயக்கர் ,என்று பாளையக்காரர்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகின்றது. இதில் நமது தமிழ் நாட்டை ஆட்ச்சிப்புரிந்தவர்கள்
1)புலித்தேவர், 2)வீரபாண்டியக் கட்டப்பொம்மன், 3)தீரன் சின்னமலை,
என்பவர்கள் ஆட்ச்சி புரிந்துள்ளார்கள். இவர்களுடைய ஆட்ச்சிக்காலங்கள்
கி.பி .1600 லிருந்து 1852வரை தங்கள் பிரதான சர்வாதிகார ஆட்ச்சியாளர்களாக
ஆண்டு வந்துள்ளார்கள் என்று வரலாறு .
நமது நாட்டின் பாளையக்காரர்கள் எப்படியெல்லாம் ஆட்ச்சிப்புரிந்தார்கள் பிறகு அவர்கள் ஆங்கிலேயர்களால் எப்படி எல்லாம் துன்புறுத்தப் பட்டார்கள்,நமது நாட்டையும்,நாட்டு மக்களையும் ,எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக்கி கடும்கொடுமைகளை சுமக்கச்செய்தார்கள் என்பதையும், வரலாற்று சுவடுகளிலும்,இந்திய வரலாற்று சான்றுகள் வாயிலாகவும், காணமுடிகின்றது.
மேலும்,இந்திய சினிமா துரையின் மூலமாகவும்,
நடிகர் திலகம் ,செவ்வாலியர் விருதுப்பெற்ற சிவாஜி கணேசன் நடித்துள்ள
வீரப்பாண்டியக் கட்டப்பொம்மன் படத்தின் மூலமாகவும்,நமது நாட்டில் பாளையக்காரர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும்,ஆங்கிலேயன் இடத்தில்
நமது நாட்டு எட்டையர்கள் எப்படி சகுனிகளாக நடந்துக்கொண்டார்கள் என்பதையும், ,வீரபாண்டிய கட்டப்பொம்மன்,சிவகங்கை மருதுபாண்டி சகோதரர்கள் போல இன்னும் எவ்வளவோ பாளையக்காரர்கள் இந்தியாவில் வாழ்ந்து உயிர் நீத்தார்கள் என்பதையும் , மக்கள் திலகம் பாரத் ரத்னா விருது பெற்ற மாண்புமிகு முன்னால் தமிழக முதலமைச்சருமான திரு எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்துள்ள சினிமா படங்களின் மூலமாகவும், நமது இந்திய நாட்டின் பாளையக்காரர்களின் வரலாற்றுச்சிறப்புகளை தெரிந்துக் கொள்ள உதவுகின்றது.
துதோட்டியால்ஆகாததுதொண்டைமான்ஆனாலும் ஆகாது என்பார்கள். தொண்டைமான் என்றால் அரசன் என்று பொருளாகும் அந்த தொண்டைமானே தொரையாகும். . அந்த காலத்தில் பாலையக்காரரைத்தான் தொரை என்றும் அழைக்கப்பட்டார்கள்
அந்த பாளையக்காரர் தான் சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஞ்சாயத்து தலைவராகவும் செயல் பட்டு வந்தார்கள். அவர் மக்களிடம் நேரடியாகச்சென்று வரி வசூல் செய்யமுடியாத விஷயமல்லவா ?ஆகவே அவருக்கு கீழ் சில பணியாளர்களை நியமித்தார்கள். அவர்களின் மூலமாகத்தான் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது.அந்த பணியாளர்கள் பெயர்தான் மணியம், கணக்கன்,தோட்டி ,தலையாரி,கர்ணம்,என்பவர்கள் நியமிக்க பட்டிரிருந்தார்கள் . இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த கிராம அதிகாரிகளை கொண்டு தான் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது .
பிருகு பஞ்சாயத்து தலைவராட்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசாங்கம் .பின்னர் அரசாங்கம் படித்த பட்டத்தாரிகளை நியமித்து
ஊராட்ச்சி மன்ற தலைவர்கள் ,கிராம நிர்வாக அதிகாரி ,கிராம பாது காவலர், நகராட்ச்சி தலைவர் ,கவுன்சிலர்கள், போன்ற பதவிகள் அரசாங்க பதவிகள் கொடுக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு மேல் உயர்ந்த பதவி வகிக்கும் உயர் அதிகாரிகளாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்,மாவட்ட ஆட்ச்சியாளர்கள்,ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்டாட்ச்சியாளர்கள்,ரெவன்யு அதிகாரிகள்,கிராமக நிர்வாக அதிகாரிகள் போன்ற அதிகாரிகளை அரசாங்கம் மூலமாக நியமிக்கப் பட்டு ,கிராம நிர்வாக வளர்ச்சிக்கும் ,கல்வி வளர்ச்சிக்கும்,முன்னுரிமைகள் வழங்கப்பட்டு மக்கள் நலன் காக்கும் நமது அரசாங்கம் விவசாயத்துறைக்கும்,நல்லவழி வகை செய்து மக்களின் முன்னேற்றப் பாதையில்சென்று கொண்டு இருக்கும் நமது அரசாங்கம் தென்னிந்திய பாளையக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகத்திற்கு எடுத்து காட்டியது போல எங்கள் ஊர் கடலூர் மாவட்டம்,(பழைய தென்னாற்காடு மாவட்டம்,)
விருத்தாசலம் தாலுக்காவைச் சேர்ந்த பாளையக்காரர் எம்.பரூர் வீரசேகரமுத்துக்கிருஷ்ண
பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு ஜமிந்தாருடைய வாழ்க்கை வரலாற்றை நமது அரசாங்கம் இன்று வரையிலும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.
இந்த பாளையக்காரரின் வாரிசுகளான திரு பொன்னம்பலம் அவர்களின் வாரிசுகளான பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,இன்றும் மு.பரூரில் வாழ்ந்துக் கொண்டும் இருக்கின்றார்கள் என்பதும் முற்றிலும் உண்மை. உயர்திரு பொன்னம்பலம் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் உயிர் நீத்தார்கள். ஆனால் அவர்களுடைய மனைவிகள் (இரண்டுபேர்கள் )மற்றும் மகன்களான வேலுதுரை ,அவருக்கு பின் தம்பிகள், மற்றும் மகள்கள் பிரேமா ,மற்றும் தங்கைகளும்,இப்போதும் பருரில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் உண்மை.
முகாசாபருரை தலைமை இடமாகக்கொண்டு சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் திரு பொன்னம்பலம் அவர்கள்தான் ஆட்ச்சி புரிந்து வந்தார்கள் என்பதும் உண்மையாகும்.அதிக கிராமங்களை கொண்ட சிற்றுர்கள் ஒன்றுபட்டு இருந்தால் அந்த பஞ்சாயத்துக்கு அந்த காலத்தில் மதுரா என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக இன்றும் மதுராவின் தலையெழுத்தை எம்.பரூர் , எம்.புதூர் ,எம்.பட்டி,எம்.பட்டிகுடிக்காடு என்றும்
பெயர்கள் ஆதாரமாக உள்ளது.
(2) "மதுரா என்பதின் பொருள்"
இந்தியாவில் பல அர்த்தங்களில் பல ஊர்களில் ,மதுரா என்று புழக்கத்தில் இருந்து வருகின்றது. 1)மதுரா என்றால் -கிராம பஞ்சாயத்துகளுக்கு மதுரா என்றும்,(2)அழகுக்கு -மதுரா(ம் )என்றும்,(3)பெண்களுக்கு -பெயர்கள் மதுரம் என்றும்,(4)கிருஷ்ணன் பிறந்த இடத்திற்கும் -மதுரா என்றும்,வெவ்வேறு அர்த்தங்களில் பேசப் படுகின்றது .மேலும் ,தேன் என்றால் இந்தியில் மது
என்றும் பொருள் உள்ளது .எனவே மது,மாது ,இரண்டுமே இனிமையை க்
குறிக்கின்றது .ஆனால் தமிழகத்தில் மட்டும் மது என்றால் போதை பொருள் என்று மற்றொறு அர்த்தத்தில் விளங்குகின்றது,
.
(3) " மு.பட்டி,-மற்றும் மு.பட்டிக்குடிக்காட்டின் சிறப்பம்சங்கள் "
இங்கே முன்பு அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளாக காணப்பட்டது.காடுகளுக்கு மத்தியில் வீடுகள் அமைத்து மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள்.இங்கே குடித்தண்ணிருக்கு போதிய வசதிகள் இல்லாமல்
மக்கள் அவதிக்குட்பட்டிருந்தார்கள் .கிணறுகள் தோண்ட படாத காலத்தில்
ஆறுகளிலும்,குளங்களிலும்,ஏரிகளிலும்.தண்ணிர் எடுத்து வந்து அருந்தினார்கள்.என்ற காலங்கள் மறைந்து ,மண் சுவற்றிலான கூரை வீடுகள் அமைத்து மக்கள் அப்பொழுது வாழ்ந்துவந்தார்கள் என்பது முற்றிலும் உண்மை.
அந்த புராண கால கட்டங்கள் முற்றிலும் மாறுபட்டு இதிகாசம் படைக்கும் கிராமங்களாகி எங்கள் ஊர் மண்ணின் மகத்துவத்தால் தண்ணீர் வளம் பெருகி ஆழ் கிணறுகள் தோண்டப்பட்டும்,எரிகள் நீர் பாசனத்தாலும்,
விவசாயங்கள் பெருகியும்,மகசூல்கள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும், மர வளங்கள், அனைத்து வித மரங்களும்,அந்த மரங்களின் கனி வகைகளும்,
அதாவது,மா,பலா,வாழை,முந்தரி,புளி,ஆரஞ்ச்,மாதுளை,கொய்யா,எலுமிச்சை,
மரக்கனிகளும், செடி,கொடிகளின் காட்டு கனிகளான களாப்பழம்,நோனாப்பழம்,ஆயிஞ்சம்பழம்,சிற்றீச்சம் பழம்,பேரிச்சம்பழம்,
நாவல்பழம்,போன்ற பழவகைகளும்,தானிய வகைகளான ,நெல்,கம்பு,சோளம்,வரகு,கேழ்வரகு,சாமை தினை ,போன்ற தானியங்களும்,
பயிர்வகைகளான பச்சைபயிர்,தட்டைபயிர்,எள்ளு ,கொள்ளு,துவரை,அவரை,
மணிலபயிர் (வேர்கடலை)உளுந்து ,விளைந்து களம் குவியும்.
பச்சை காய் கறிகள் கத்தரி,வெண்டை,பவைகாய்,கோவைக்காய்,பரங்கிகாய்,பூசனிக்காய் பீர்க்கங்காய் சுரைக்காய்,மிளகாய்,தக்காளிப்பழம் முள்ளங்கி , கிழங்கு வகையில் வள்ளிக்கிழங்கு,மரவள்ளிக்கிழங்கு,கருணைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு சேனை க்கிழங்கு,,போன்றவைகளும்,
கீரை வகைககளில் நாட்டு கீரைகள் , தும்பை,பண்ணை,,
பசலை,கோழி பசலை,ஊசிப்பண்ணை,சாட்டரனை,அரைக்கீரை,பாலக்கீரை
,தண்டுக்கீரை புளிச்சைக்கீரை போன்ற கீரைவகைகலும்,
பூக்கள் வகையில் ரோஜா,மல்லிகை,முல்லை,அடுக்கு மல்லிகை,குண்டுமல்லிகை,வாடாமலர்,
கனகாம்பரம்,சாமந்தி,துளுக்குசாமந்தி,அரும்பு,பொன்னரும்புகாட்டுமல்லிகை
போன்ற பூக்கள் வகைகளும்,
மர ம் வகைகளில் =
விலை உயர்ந்த மரங்களான தேக்குமரம் ,பலாமரம்,பூவரசமரம்,கருங்காலி மரம் ,பொரிச்சிமரம் ,வேப்பமரம்,புங்கமரம்,நொனாமரம் ,மற்றும்,வாகைமரம்,
துரிஞ்சிமரம்,வேலமரம்,கருவைமரம்,அயிஞ்சிமரம்,கருவேலமரம்,ஆலமரம்,
அரசமரம்,வன்னிமரம்,பனைமரம்,தென்னைமரம்,ஈச்சம்மரம்,பேரீச்சம்மரம்,
முந்தரிமரம்,மாமரம், வாழைமரம்,கொய்யாமரம்,ஆரஞ் மரம் நாரத்தமரம்,
சாத்துக்குடி மரம்,எழுமிச்சம்மரம், இலுப்பைமரம்,கொடுக்காபுளி மரம் புளியமரம்,போன்ற மரவகைகளும்,
முள் வகைகளில் =
காரைமுள்,கிளுவைமுள்,கருவைமுள்,காட்டு கருவைமுள் (40 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது )அதற்குமுன் காட்டுகருவை நமது நாட்டிலேயே ஒரு மரம்கூட கிடையாது என்பது உண்மை.இவைகள் வேலிக்காகபயன்படுத்தப்பட்டவைகள்ஆகும். மற்றும்,கள்ளி,சதுரக்கள்ளி,இலைக்கள்ளி,சப்பாத்திக்கள்ளி,ஆருமுகக்கள்ளி,கொடிக்கள்ளி,உருளைக்கள்ளி, காரை, பிரண்டை,முன்னை,முஸ் ட்டை,போன்றவைகளும்,
மண்வகைகளில் -
எட்டு திசைகளுக்கும் வெவ்வேறு நிறத்தில் மண்ணும்,வடக்கில் வண்டல்மண்ணும் ,தெற்கில் வெண் மணலும் ,கிழக்கில் செம்மண்ணும்,மேற்கில் உளைமன்னும்,(சேற்று மண் )தென்மேற்கில் ஈரங்காத்த மணலும்,தென்கிழக்கில் கரிசல் மண்ணும்,வடகிழக்கில் வண்டல்கரிசல் மண்ணும்,வடமேற்கில் சுண்ணாம்பு மண்ணும் ,துண்டான் காட்டில் உப்புமண்ணும் போன்றவைகள் மண்ணின் அற்ப்புதமான மகத்துவங்களாகும்
அதிகமாக கிடைக்கும் பழங்கள் -
மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்,முந்தரிப்பழம்,மற்றும் கரும்பு ,சாகுபடியும் இங்கே அதிகமாகவே பயிரிடப்படுகிறது. கரும்பு சாகுபடி அதிகம் செய்வதால் இங்கே நாட்டு வெல்லம் உருவாக்கப்பட்டு வந்தது.இப்போது அந்த முறைகள் மாற்றமாகி பயிரிடப்படும் கரும்புகள் அனைத்தும் சர்க்கரை ஆலைகளுக்குஅனுப்பப்படுகின்றது.
பாளையக்காரர் ஆட்ச்சி புரிந்த காலங்களில் விவசாயம் மேலோங்கி சுற்று வட்டாரங்களில் தானிங்கள் களம் குவிந்ததாகவும்,மக்கள் அனைவரும்நீதியும்,நேர்மையாகவும்,வாழ்ந்ததாகவும்,முன்னோர்கள் கூருகின்றார்கள் . அதே நிலங்கள் இப்போதும் இருந்தாலும்விவசாயங்களின்
மவுசுகள் குறைந்து புதிய பாதையில் மக்களின் மனமாற்றங்கள் முற்றிலும்
வேறுப்பட்டு காணப்படுகின்றது. இப்போது விவசாயம் செய்பவர்கள்என்றால் குறைவாக நினைக்கும் காலம் நடந்து வருகின்றது என்பது தான் முற்றிலும் உண்மை. எனவே காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை என்பதும் உண்மை.!
இது நமது மக்கள் அனைவரும் மிக முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய
விஷயம்.நமது மாவட்டம் கடலூர் கோடு நம்பர் 3(மூன்று )நமது வட்டம் விருத்தாசலம் பிளாக் நம்பர் 10 (பத்து ) வில்லேஜ் நம்பர் மு..பரூர் நம்பர் 22, மு.பட்டி நம்பர் 23 என்பவை ஆகும். மேலும்,நமது விருத்தாசலம் கீழ் உள்ள மொத்தக்கிராமங்கள் 51 ஆகும். முதல் கிராமமாக ஆலிச்சிக்குடி வேட்டக்குடி 51 ஆவது கிராமமாகும்.ஆக நமது விருத்தாசலம்வட்டத்தின் கட்டு பாட்டில் மொத்தம் 51 கிராமங்கள் உள்ளது. இதில் நமது ஊர் மு.பரூர் 22ஆம் இடத்திலும்,மு.பட்டி 23ஆம் இடத்திலும் இருக்கின்றது .என்பதை அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோளாகும்.
இவன்
பட்டிக்குடிக்காடு ஆர்,கோவிந்தராசு
சாபர்மதி,அகமதாபாத்,குஜராத்மாநிலம்
(21-07-2014)
குறிப்பு -மேலே எழுதியுள்ளவைகள் அனைத்தும் நான் பிறரிடம் கேட்டுத்தெ ரிந்தவையும்,எனது அனுபவ ரீதியாகவும்,எழுதியுள்ளேன் .இன்னும் எனக்குத்தெரியாதவைகள் எவ்வளவோ இருக்கும்.எனவே நன்கு
விபரம் தெரிந்தவர்கள் இந்த தொலை பேசியில் (09879042958 ) தொடர்புக்கொள்ள வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி வணக்கம்.