Monday, 28 July 2014

           நான் நேரில் கண்ட  இந்திய பிரபலங்கள், மற்றும் நட்ச்சத்திரங்கள்.

                                       பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு 

          1) திரு. நீலம்  சஞ்சீவ ரெட்டி  முன்னாள் குடியரசுதலைவர் நெய்வேலியில் 2வது நிலகரி சுரங்க அடிக்கல் நாட்டு விழாவில்.

           2) திரு  நடிகர்திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னாள் தமிழக முதலமைச்சர் நெய்வேலியில் அடிக்கல் நாட்டு விழாவில். 

                          3)திரு  கலைஞர்  மு.கருணாநிதி முன்னாள்தமிழக முதலமைச்சர் விருத்தாசலத்தில் பிரச்சார பொது கூட்டத்தில்,
    
                           4)  திருமதி ,இந்திராகாந்தி அமமையார்  முன்னாள் பிரத மந்திரி, விருத்தாசலத்தில் பொது கூட்டத்தில் ,
                                 
       5)  செல்வி  ஜெ .ஜெயலலிதா  அம்மா  இந்நாள் தமிழகமுதலமைச்சர்.விருத்தாசலம் பொது கூட்டத்தில்.,

                              6) திரு ,ராஜீவ் காந்தி  முன்னாள் பிரதம மந்திரி குஜராத் மாநிலம் சாபர்மதியில், இரயில்வே நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கி பொது கூட்டத்திக்கு செல்லும் பொழுது .

               7) திரு,நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன்          விருத்தாசலத்தில் பொது கூட்டத்தில் ,

                              8)திரு தொல் திருமால் வளவன் ,தலைவர் விடுதலை சிறுத்தை 
  பட்டிக்குடிக்காட்டில் பொது கூட்டத்தில்,

                     9)திரு ,குமரி ஆனந்தன்,முன்னாள் காங்கிரஸ்  தலைவர் ,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்க ஆண்டு விழாவில் ,

                          10)திரு , நடிகர் இளைய தளபதி  விஜய் , சென்னை கோல்டன் பீச்சில் சினிமா சூட்டிங் நடந்த போது சந்தித்து பேசினேன் .அப்போது அவரிடம் சொன்னேன் விஜய் சார் நீங்கள் ஹிந்தி சினிமாவில் நடிக்கலாமே என்றேன் .அதற்க்கு அவர் தந்த பதில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார். 
      
                            11) திரு ,கங்கை அமரன்  இன்னிசை வேந்தர் ,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கம் ஆண்டு விழாவில், அவருடைய இசைக்குழுவினருடன் வந்து கலந்துக்கொண்டு இசை நிகழ்ச்சி நடந்தபோது நான் அவருக்காக எழுதிய பாடல் '"இன்னிசை வேந்தரே "என்ற பாடலின் மூலம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவருடன் போட்டோவும் ,ஆட்டோகிராப்பும் வாங்கி வைத்துள்ளேன் 

                             12) திரு ,சீர்காழி .கோவிந்தராஜன்  சினிமா பின்னணி ,பாடகர்  விருத்தாசலத்தில் பழமலை நாதர் பெரியக்கோயிலில் பக்தி பாடல்கள் பாடிய போது ,
                              
                                 13)திரு, டாக்டர் சீர்காழி  சிவ சிதம்பரம் சினிமா பின்னணி பாடகர்  குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்க ஆண்டு விழாவில்  மேடை கச்சேரியில்   என்னுடைய கைப்பட  எழுதிய பாடல்களில் எவ்வளவோ பாடல்களின் நோட்டை அவரிடம் கொடுத்த போது  திரு சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களாகவே அவருக்கு விருப்பப்பட்ட பாடலை தேர்ந்தெடுத்து ,அவருடைய இன்னிசை குழுவின் இசைக் கலைஞரோடு முதல் முதலாக நான் எழுதிய பாடலை  12-06-2010  அன்று அகமதாபாத் தமிழ் சங்கத்தின்  காங்கரியா திறந்த வெளி இசை அரங்கத்தில் இன்னிசை கலை விழாவில் கலைமாமணி,பத்ம ஸ்ரீ ,டாக்டர்,சீர்காழி சிவ  சிதம்பரம் அவர்களால் பாடப்பட்டு முதல் முதலாக கச்சேரியில் அரங்கேற்றப் பட்ட பாடலான கடன் கொடுத்தான் நெஞ்சம்................என்ற பாடலின் முலமாக அவர்களை நேரில் சந்தித்த பெரும்பாக்கியம் கிடைக்கப்பட்டு  அவர்களால் என்னுடைய இருபது ஆண்டுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் பாடல்களுக்கும் பாராட்டுகளும்,கிடைக்கப்பட்டு ,ஆனந்த மனமகிழ்ச்சியடைந்தேன் என்றால் இதைவிட பெரும் பாக்கியம் ,என்னை அப்பெரும் மக்கள் அரங்கத்தில் அவருடைய இசைமேடையில் அழைத்து இந்த பாடலை எழுதிய  பாடலாசரியர் பட்டிக்குடிகாடு .ஆர்.கோவிந்தராசு  இவர்தான் என்று என்னை கெளரவ படுத்தியதோடு,என்னுடைய ஊர் பெயரையும் புகழ் பரப்பிய  திரு சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் என்னுடைய நெஞ்சிலிருந்து நீங்காத நீல மயில் வாகணத்தில் அமர்ந்திருக்கும் பால முருகனாக என் கண் முன்னே எப்பொழுதும் காட்ச்சியளித்து கொண்டிருக்கும் என் கண்ணால் கண்ட தெய்வம் ஆகும்.

                                என்னை பெற்றெடுத்து ,ஆளாக்கி இந்த உலகத்திற்கு கொண்டுவந்த அம்மா அகிலாண்டத்திர்க்கும்,அப்பா இராமசாமிக்கும்,நான் செய்ய வேண்டிய நன்றியை இதன் மூலம் அடைந்தேன் .என்பதிலும் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.எனவேஎன்னுடையபெற்றோர்கள்,மனைவி கண்ணகி,மகன் ராகுல், மகள்கள் தனலக்க்ஷ்மி ,ராஜலக்ஷ்மி, உற்றார்,உரவினர்களைப்போல என் மனதில் இடம் பிடித்த மாமனிதர் கலைமாமணி பத்ம ஸ்ரீ டாகடர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகும்.

                                               இவரின் தந்தையாகிய கலைமாமணி,பத்மஸ்ரீ ,டாக்டர் சீர்காழி .எஸ்.கோவிந்தராஜன் பாடிய பக்தி பரவசமான  சினமா பின்னணி பாடல்களும்,பக்தி பாடல்களும் , என் இளம் வயதிலிருந்து எப்படி நீங்காமல் நிற்க்கின்றதோ ,அதைப் போலவே நினைவிலிருந்து நீங்காத பிரபலம்  திரு சிவ சிதம்பரம்  ஆகும். .

                                     14)திரு ,நரேஷ் கண்ணோடியா குஜராத் சினமா நடிகர் ,
சாபர்மதியில் பஞ்ச சீல் மருத்துவமனையில்  பார்த்தது,

                                     15) திரு,எம்.ஆர். பன்னீர்செல்வம், முன்னாள் தமிழக அமைச்சர், சிதம்பரத்தில் பாலாஜி - ஷோபா வின் திருமண விழாவில் சந்தித்தது. 

                                                        16) திரு மு.க  .ஸ்டாலின் தமிழக முன்னாள் அமைச்சர்  சென்னை  சென்ட்ரலில் சென்றுக் கொண்டிருக்கும் போது பார்த்தது.

                                                  17) திரு,சாலமன் பாப்பையா  பேராசரியர்,குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கத்தில் கல்யாணமாலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது.

                                               18)  திரு இராஜா சிறந்த சொர்ப்பொழிவாளர் ,அகமதாபாத் தமிழ் சங்க கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சந்தித்தது,

                                                      19) திருமதி பாரதி பாஸ்கர் சிறந்த தமிழ் சொர்ப்பொழிவாளர்  குஜராத்தில் அகமதாபாத் தமிழ் சங்கம் கல்யாணமாலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது .

                                                      .  20) திரு இளைய ரவிராஜா  இசை அமைப்பாளர்,விருத்தாசலத்தில் பாரதி திருமண விழாவில் சந்தித்த போது .

                                                             21) திரு  மோகன் (வெங்கடேஷ் ) கல்யாண மாலை தொகுப்பாளர்  குஜராத்தில் அகமதாபாத்தில் கல்யாணமாலை  நிகழ்ச்சிக்கு வந்தபோது சந்தித்தது.

                                                                  22)திரு ,அமிதாப் பச்சன்   ஹிந்தி சூப்பர் ஸ்டார் 
பம்பாயில் கோரேகாவ் சினிமா ஷூட்டிங்க் நடந்தபோது என் குடும்பத்தோடு சந்தித்தது.

                                                                     23) திரு,அணில் கபூர்  ஹிந்தி நடிகர்  பம்பையில் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது . 

                                                                  24) திரு,.சஞ்சய்தத் பம்பாய் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது.

                                                                 25)திரு திரு அனுகபூர்  ஹிந்தி நடிகர் பம்பாய் கோரேகாவ் சினிமா ஷுட்டிங் நடந்தபோது சந்தித்தது.

                                 இப்படி மேலே உள்ள பிரபல முன்னணி நட்ச்சத்திரங்களை ஒரு சிலரை இரண்டு,மூன்று முறை கூட சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றது.ஒரு சிலரிடம் போட்டோவும், எடுத்து வைத்துள்ளேன் ,ஆட்டோகிராப்பும்,வாங்கியுள்ளேன்.எனது முன்னோர்கள் செய்த பெரும் பாக்கியம்  பல பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தமைக்கு நான் ஆண்டவனுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். 

                                           பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு 
                                        சாபர்மதி,அகமதாபாத்,குஜராத் மாநிலம் 
                                                                   ( 27-07-2014).

குறிப்பு -மேலே எழுதியுள்ளது அனைத்தும் உண்மை .



No comments:

Post a Comment