பட்டிக்குடிக்காடு இரா .கோவிந்தராசு
மதுரா மு.பட்டி, மு. பட்டிக்குடிக்காடு
" பெயராக்கம் பற்றிய விரிவாக்கம்"
அன்பார்ந்த இனிய தமிழ் நெஞ்சங்களுக்கும்,எனது சொந்த ஊர் மக்கள் அனைவருக்கும் ,எனது அன்பு கலந்த முதல் வணக்கம்.!
எங்கள் ஊர் "மு.பட்டி," "மு .பட்டிக்குடிக்காடு பெயராக்கம் " பற்றிய விரிவாக்கம்" இணைய தளத்தின் முலம் இந்த உலகத்திற்கு தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
நாம் வாழும் இந்த திவ்விய பிரபஞ்சத்தில் ஜன்மம் எடுத்ததற்கு ஒவ்வொருமானிடரும் தம்மால்முடிந்த ஏதாவது ஒருசெயல்புரியவேண்டும்
இங்கே என்னால் முடிந்த ஒரு சிறிய செயலை நாம் வாழும் இந்த உலகத்தில் இணைய தளம் முலம் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன் .
அதுதான் நான்பிறந்த புண்ணிய பூமியான மு பட்டிக்குடிக்காட்டின் பெயராக்கம் பற்றிய விரிவாக்கம் இதோ உங்கள் முன்னிலையில் நான் கேட்டரிந்தவையும்,எனதுஅனுபவரீதியாலும்நான்அறிந்தவற்றைஇங்கே சமர்ப்பிக்கின்றேன் .
உலக வரைப்படத்தில் நாம் வாழு ம் நமது நாட்டையும்,நமது ஊரையும் ,நமது வீட்டையும்,அறிவியல் வளர்ச்சியின் மூலமாக இணையதளம் மூலமாக வும் கண்டு மகிழ்கின்றோம் இதற்க்கெல்லாம் முக்கிய காரணம் அறிவியல் தொழில் நுட்ப்ப வளர்ச்சியே காரணமாகும்,
தொழில் நுட்ப்ப வளர்ச்சியடையவில்லை என்றால் நாம் அனைவரும்கிணற்றுக்குள்தவளைப்போன்றேசுழன்றே வந்துக்கொண்டிருப்போம். இவ்வுலகைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு கிட்டிருக்காது என்பது முற்றிலும் உண்மையாகும்.
எங்கள் ஊர் மதுரா பட்டிக்குடிகாடு என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்வி அனைவரிடமும் ஒரு குழப்பங்கள் வரலாம் .அதற்க்கு விடையாகநான்இதன்மூலம்எனக்குத்தெரிந்தவற்றையும்,முன்னோர்களிடம் கே ட்டுத்தெரிந்தவற்றை யும் இங்கே எழுத கடமைப் பட்டுள்ளேன்.
மதுரா பட்டி என்பது உலக வரைப்படத்தில் ஏழு பெரிய கண்டங்களில் ஒன்றான நமது ஆசியாக்கண்டத்தில் இந்திய தேசத்தில்,தமிழ் நாட்டில் பழைய தென்னாற்காடு மாவட்டம் ,இப்போதைய மாவட்டமாக இருக்கும் கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் தாலூக்காவில் முகாசாப்பருரை தலைமை இடமாகக்கொண்டு மதுரா மு.பட்டியும் ,மதுரா.மு.பட்டிக்குடிகாடும,
இருக்கின்றது எங்கள் சுற்று வட்டார ஊர்களை அரசாட்ச்சி செய்து வந்தவர் தான் மகாராய ராய ஸ்ரீ , மேன்மை தங்கிய இராஜாதி,இராஜா,,உயர்திரு வீர சேகரமுத்துக்கிருஷ்ண,பொன்னம்பலகச்சராவ் பாளையப்பட்டு, ஜமிந்தார்,
துரை அவர்களால் ,எங்கள் சுற்றுவட்டார ஊர்களை அரசாட்ச்சி செய்து மக்களை பாதுகாத்து வந்த ஊர்களில் ஒன்றான மதுரா மு. பட்டி என்றஎங்கள் ஊரான ,
இந்த மதுரா மு.பட்டியில் இணைந்து இருப்பதுதான் மதுரா மு.பட்டிக்குடிக்காடு ஆகும். இந்த இரண்டுமே ஒரே ஊர்தான் என்றாலும் மு.பட்டி,என்றும், மு.பட்டிக்குடிக்காடு என்றும் எப்படி பெயர்மாற்றம் வந்துள்ளது என்ற கேள்வி எழுந்தபோது கிடைத்த பதிகள் இதோ
மு.பட்டி மற்றும் மு.பட்டிக்குடிக்காடு என்ற பெயர் உருவான விபரம் .அதன் பொருள் இப்படித்தான் உருவாகி இருக்குமோ என்ற சிந்தனை யில் தோன்றிய வினாவிற்கு கிடைத்த விடை இதோ
.முதலில் பட்டி என்பதின் பொருள் காணலாம்(1)
பட்டி என்ற சொல்லுக்கு இந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும்,பல காரணங்கள் கூருகின்ரார்கள்.பட்டி என்றால் புராண இதிகாச காலங்களிலிருந்தே பார்ப்போமானால் இந்தியாவின் மத்தியபிரதேசமான உஜ்ஜயின் நகரத்தை ஆண்ட இராஜா விக்ரமாதித்தன் அரசவையில் முதல் ஆலோசகராக விளங்கியவரின் பெயர் பட்டி என்று அழைக்கப்பட்டார்.அந்த மகத்தான அறிவு பெற்ற ஆலோசகர்தான் இராஜா விக்கிரமாதித்தனின் அரசவையில் புகழாக விளங்கியவர் பெயர் பட்டி ஆகும்..அந்த பட்டி என்ற மகா மந்திரியின் ஆலோசனப்படித்தான் விக்கிரமாத்திதனின் ஆட்ச்சி நடந்தது.
(2) நமது இந்திய தேசத்திலும் ,நமது தாய் தமிழ் நாட்டில் எத்தனையோ ஊர்களில் தங்களின் ஊர்களுக்குப்பின்னால் பட்டி என்ற பெயர் இடம்பெறுகின்றது.தமிழ் நாட்டில் மட்டும் பதினெட்டு பட்டிகள் உள்ளது என்றும் சொல்லுவார்கள் அதற்க்கெல்லாம் தகுந்த மூலக்காரனங்க்கள் இருக்கும் என்பதும் உண்மை. இந்த வரலாற்று சிறப்புமிக்க பெயரான பட்டிக்கு எங்கள் ஊரும் பட்டி என்றபெயர் பெற்றமைக்கு நமது கிராம மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயமல்லவா .பட்டிஎன்றால் அறிவாளி,புத்திக் கூர்மையுள்ளவர் என்று கூட சொல்லலாம்..அப்படிப்பட்ட அறிவில் சிறந்தவர்களையே அரசர் தனது அரண்மனையில் அரச தர்பாரில் பட்டி எனும் மந்திரியை நியமிக்கின்றார் . அந்த பட்டி எனும் மகா மந்திரியாக விளங்க்கியவர் தான் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் இராஜா விக்ரமாதித்தன் அரசவையில் தலைமை மந்திரியாக பட்டி என்பவரை நியமித்திருந்தார் .அவர்களைப்போலவே எங்கள்ஊரைச்சேர்ந்தமு.பாரூர் பாளையக்காரருக்கு ஆலோசக மகாமத்திரிகளாக வாழ்ந்துவந்த ஊர்தான் பட்டி என்ற எங்கள் கிராமமாகும். எங்கள் ஊருக்கு பட்டி என்றும்,பட்டிக்குடிக்காடு என்றும்,பெயர் சுட்டியவர் யார் ? அவர் எப்படி வாழ்ந்த அரச பரம்பரை குடிம்பத்தை சேர்ந்தவர்கள்,என்பதை இங்கே காணலாம்.
(3) பட்டி,என்ற சொல்லுக்கு ,அர்த்தம் அறிவில் மிகச் சிறந்த மேதைகளும்,கவிப்புலவர்களும், இலக்கணஇலக்கிய,வல்லுனர்களும்,நிறைந்த மாமன்றம் என்றும் பொருளாகும்.ஆகையால் அக்காலத்திலிருந்தே ஒரு அரசவையில் மன்னனாக விளங்க்குபவர் தனக்கு சாதகமான புத்திக் கூர்மையுள்ள ,அறிவில் சிறந்த பட்டி எனும் மந்திரியாக நியமிக்கபடுகின்றார்.என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே அன்றும்,இன்றும், வேறெந்த தேசத்திலும்,மாநிலத்திலும்,இல்லாத தனிச்சிறப்பு நமது தாய் மண்ணுக்கும்,நமது தமிழ் மொழிக்கும் உள்ள மிகச்சிறந்த சிறப்பம்சங்கள் தான் பட்டி மன்றங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(4)அன்றும்,இன்றும்,நகரங்களிலும்,கிராமங்களிலும் முற்றும்கற்றுணர்ந்த அறிவியல் சிறந்தவர்கள்,ஒன்று கூடி விவாதமேடைகள் அமைத்து தங்களுடைய திறமைகளைவெளிப்படுத்திவெற்றித் தோல்விகளை நியமிக்கும்மாமன்றத்திற்கு,பட்டிமன்றம்என்றும் ,இன்றும் வானொலியிலும்,தொலைக்கட்ச்சியிலும்,பட்டிமன்றங்கள் மிகச் சிறப்பாக மக்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.ஆகவே எங்கள் ஊர் சுற்று வட்டார கிராமங்களை இராஜா அரசாட்ச்சிகள்செய்துவந்தாலும்,அவருக்குஆலோசகர்களாகவிளங்கியவர்கள் எங்கள் ஊர் பட்டி கிராம நிர்வாகிகளாவார்கள்.என்பதில் பெருமிதம் அடைகின்றோம்.
(5)முன்பு கிராமபுரங்களில் கால் நடைகளை இரவு நேரங்களில் ஒரு இடத்தில் தங்க வைப்பதர்க்குள்ள இடத்திற்கும் பட்டி என்பார்கள்.மேலும் நமது அண்டை நாடான கேரளாவில் வேறுவிதமாக அழைக்கின்றார்கள்.மற்ற பிற மொழி பேசும் மாநிலங்களில் பலவித அர்த்த்ட்ங்க்களில் பட்டி என்ற சொல்லில் பெயரை உபயோகப்ப்டுத்துகின்ரார்கள்.
இராஜா விக்கிரமாதித்தன் போலவே எங்கள் விருத்தாசலம் வட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களை (பேரூர் ) பெரியப்பரூர் என்று அழைக்கப்படும் ஆங்கிலேயனால் பெயர் மாற்றப்பட்ட முகாசாப்பரூர் என்னும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு ,எங்கள் ஊரின் இராஜாவாக விளங்கியவர் மகாராய ராய ஸ்ரீ மகா கணம்மேன்மை தங்கிய ,உயர்திரு வீர சேகர ,முத்துக்கிக்ருஷ்ண,பொன்னம்பல,கச்சிராவ் பாளையப்பட்டு,ஜமிந்தார் அவர்களின் அரச தர்பாரில் மணியம் பார்த்தவர்களும்,அரசருடைய முக்கிய ஆலோசகர்களாக விளங்கியவர்களும்,அரசருடைய நிப்புலங்க்களை ,கண்காணித்துவந்தவர்களும்,அரசருக்குஉண்மையானநட்ப்புரவுக்கொண்ட நெருங்கிய மாமனிதர்களாக விளங்கிய அதிகார மந்திரி (பட்டி)யாக வாழ்ந்த வர்களின் அதிகாரி பட்டி என்பதால் பிற்க்காலத்தில் மதுர்ரா மு.பட்டி,என்றும்,மதுரா,மு. பட்டிக்குடிக்காடு என்றும்,இப்போதும் எங்கள் ஊர் பெயர் விளங்கி வருகின்றது.என்பது ஆதாரமாகவுள்ளது.
முற்காலத்தில் எங்கள் ஊர்களை அரசாட்ச்சி செய்துவந்தவர் இராஜ பரம்பரை யை சேர்ந்தவர் அவர்களை `பாளையக்காரர் என்றும் ,ஜமிந்தார் ,என்றும் ராஜாஎன்றும் ,அழைக்கப்பட்டார் . அவர்களுடைய ராஜாகோட்டை எனும் மிகப்பெரிய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனை இருந்த இடம் இப்போது உள்ள மனிதர்களுக்கு ஒரு சிலபேர்களுக்குத்தான் தெரியும் .அந்த அரண்மனை இப்போது இல்லை என்றாலும் ,அரண்மனை இருந்த இடம் மாறாமல் அரண்மனைகாடு என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.
அந்த அரண்மனை காடு இப்போது எங்குள்ளது அதற்க்கு ஆதாரம் என்ன இருக்கின்றது என்றால் இப்போது இருக்கும் முகாசாபருருக்கும் நேர் கிழக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும் ,மு.பட்டிக்கு வடக்கில் ,மு .பட்டிக்குடிக்காட்டுக்கு வட்த்திசையில் ஒன்றரை கி.மிட்டார்தூரத்திலும்கோணாங்குப்பம்வடக்குதிசைமங்கலம்பேட்டை,யிலிருந்துஆறுகிலோமிட்டர்தூரத்திலும்,கிழக்குதிசையில்பெரியவடவாடி,சின்னவடவாடியிலிருந்து ஐந்து கிலோமிட்டர் தூரத்திலும் நடுவில் காட்டுபகுதியில் தான் அப்போது ராஜா அரண்மனை இருந்தது .அங்கே கட்டுக்கோப்பான பழைய மதில் சுவர்களும் ,நான்கு திசைகளிலும் தண்ணிர் கிணறுகளும் ,அரண்மனைக்கு மேற்புறம் பெரிய குளமான செங்குளம் இருந்தது .அந்த செங்குளம் இப்போதும் இருக்கின்றது.
ஆனால் இப்போது ராஜா அரண்மனை அங்கு இல்லை அதே ராஜாவின் வீரசேகர முத்துகிருஷ்ணருடைய வாரிசான உயர்திதிரு பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு அவர்களின் காலத்திலேயே அரண்மனை காட்டுப்பகுதியை விட்டு இடம்பெயர்ந்து புது அரண்மனை செங்குளம் அருகில் வடதிசையில் முகாசாபருரில் கட்டப்பட்டது .இந்த அரண்மனையில்தான் இப்போது ராஜ பரம்பரையின் வாரிசுகளான அவருடைய பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் இன்றும் முகாசாபருரில் வாழ்ந்து வருகின்றார்கள்..
அப்போதைய அரண்மனையின் ராஜா தர்பாரில் ஆயிரக்கணக்கில் பணியாளர்களாக நியமிக்கபட்டிருந்தார்கள். .நமது சுற்று வட்டாரகிராமமக்கள்..இங்கேநூற்றுக்கணக்கானயானைகளும்,ஒட்டகங்களம் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும், கோழிகளும்,வளர்த்து பராமரித்து வந்துள்ளார்கள்.,
இந்த பிராணிகளை பராமரித்தலும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக இடங்கள் அமைத்ததும் ,ராஜா
அரசாட்ச்சி செய்த காலத்தில் தோன்றிய இடங்களே பிற்காலத்தில் கிராமங்களாகி ,அந்தந்த கிராம நிர்வாகத்தையும் பாளையக்காரராலேயே ஆட்ச்சி நடத்தப்பட்டு வந்தது .ராஜாவின் ஆட்ச்சிக்கு உட்பட்ட கிராமங்களான முகாசாப்பரூர்,கோணாங்குப்பம்,காட்டுப்பரூர்,கர்னத்தம்,எடைச்சத்தூர்,சிருவாம்பார், வலசை,பிஞ்சனுர்,மு.புதூர்,தொட்டிகுப்பம்,,சின்னப்பரூர்,மேமாத்தூர்,மு.பட்டி,மு.பட்டிக்குடிக்காடு,சிவனார்குப்பம் ,ராஜபாளையம் ,ரெட்டிக்குப்பம் ,
எருக்கன்குப்பம்,எருமனூர்,சின்னவடவாடி,பெரியவடவாடி,விஜயமாநகரம்
,பூவனுர் ,மங்கலம்பேட்டை,போன்ற ஊர்களை உள்ளடக்கி ஆட்ச்சி புரிந்த ராஜாதி ராஜா மகாராய ராய ஸ்ரீ வீரசேகர,முத்துகிருஷ்ண,பொன்னம்பல கச்சராவ் பாளையப்பட்டு ஜமிந்தார் அவர்களால் மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களுக்கு பட்டையங்கள் சூடப்பட்டுள்ளது இன்று வரையில் ஆதாரபுர்வமாக பெயர்கள் மாறாமல் இருக்கின்றது.
இந்த சுற்று பட்டு கிராமங்களான முகாசாப்பரூர் அனைத்து கிராமங்களுக்கும் தலைமை ஊராகும் .இந்த ஊரை பெரியபரூர் என்றும் அழைக்கப்படுகின்றது.இந்த பெரியபருரில் தான் ராஜாவின் அரண்மனையில் பலவகை கைவினை தொழிளாளர்கள் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த்தார்கள் .அவரவர் தொழிலுக்கேற்ப தெருக்கள் வாரியாக
வீடுகள் அமைக்கப்பட்டு அது இன்றும் மாறாமல் ஆதாரமாக உள்ளது.
பாளையக்காரரிடம் அதிகமான நஞ்சை,நிலங்களும், அதிகமான புஞ்சை நிலங்களும்,எங்கள் சுற்று வட்டாரங்களே ராஜாவின் ஆட்ச்சிக்குட்ப்பட்டு இருந்தது .எனவே பாளையக்காரரை துரை என்று அனைத்து மக்களாலும் அழைக்கப்பட்டார்.
திரு துரை அரண்மனையில் அப்போது இயந்திர மோட்டார் வாகனங்கள் இல்லாத காரணத்தால் மீனா எனும் மனித தோள்களில் தூக்கி செல்லும் பல்லக்கு மீதில் அமர்ந்து பயணம் செய்து வந்தார்கள்,
இங்கே யானையிலும்,குதிரையிலும்,ஒட்டகத்திலும் ராஜாஅவர்கள் வெளியூர் பயணங்களிலும் ஆலயவழிபாடுகளுக்கு செல்லும்போதும் கால்நடைகளைதான் பயன்படுத்தினார்கள்.எனவே அந்ததந்த யானை,குதிரை,ஒட்டகம்,ஆடுமாடுகள்,போன்றவற்றை பராமரிக்கவும்,அவைகளுக்கு தீவினங்கள்,கொடுப்பதற்கும்,பணியாட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இன்றும் தகுந்த ஆதாரங்கள் எங்கள் ஊர் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கின்றது.
அதைப்போலவே ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஊர் பெயர்கள் பாளையக்காரரால் பட்டயங்கள் சூடப்பட்டுள்ளது.அதாவது ராஜாவின் அரண்மனை சேனைபடைகள் தங்கியிருந்த ஊர் சேனாகுப்பம் (சிவனாற்குப்பம்) ஆடுமாடுகள் காடுகளில் மேய்ந்து வந்தாலும் அவைகளை இரவு நேரங்களில் தங்கவைத்தயிடம் பட்டி என்று அழைக்கப்பட்டுள்ளது .எனவே இவ் வூ ருக்கு பட்டி என்றும்,கால்நடைகள் தண்ணிர் குடிப்பதற்கு பலயிடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டுயிருந்ததால் அந்த ஊருக்கு தொட்டிக்குப்பம்,என்றும்,ஆடுகள் அதிகமாக பராமரிக்கப்பட்டயிடமும் ,கோனார்கள் அதிகம் பேர்கள் தங்கியிருந்தயிடம் கோணாங்குப்பம்,என்றும் பெயர்கள் சூடப்பட்டுள்ளதும் ஆதார பூர்வமாக இன்றளவும் உள்ளது.
மதுரா .மு.பட்டி,என்றும்,மதுரா மு.பட்டிக்குடிக்காடு இந்த இரண்டு ஊர்களுமே ஒரே ஊர்கள் என்றாலும் பெயர்களில் மாறுபட்ட வித்யாசங்கள் எப்படி வந்தது/? இந்த வினாவிற்கு விடைதான் நான் முதியோர்களிடம் கேட்டறிந்தவை இதோ 1)மு.பட்டியை சேர்ந்து இருப்பதால் பட்டி ,என்றும் இது காடுகளுக்கு செல்லும் வழியில் மக்கள் குடியேறிய காரணத்தாலும் குடிக்காடு என்றும், மு.பட்டியையும் குடிக்காட்டையும் இணைத்து மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்று அந்த காலத்திலேயே பாளையக்காரரால் பட்டயம் சுடப்பட்டுள்ளது என்றும்,இப்பட்டிக்குடிக்காட்டில்
முற்காலத்தில் தோணான் என்பவன் எவருக்குமே அஞ்சாத நெஞ்சம் படைத்து அவன் வைத்ததுதான் சட்டம்,திட்டம்,எல்லாமே நடந்ததாகவும் அவன் குடியிருந்தால் தோணான் குடிக்காடு என்றும், பட்டியும் குடிக்காடும் இணைத்து மு பட்டிக்குடிக்காடு என்றும் நமது சுற்றுபட்டு கிராமங்களை பாளையக்காரர் ஆட்ச்சி செய்து வந்ததால் பலஊர்கள் ஒன்றுபட்டிருந்ததால் அப்போது அதுவே மதுரா என்றும் அழைக்கப்பட்டதாகவும் அந்த காரணத்தால் மதுரா மு.பாட்டிஎன்றும் ,மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்றும், பாளையக்காரர் காட்டுஅரன்மனையை விட்டு முகாசாப்பருரில் வந்து புது அரண்மனைகட்டிடம் அமைத்து தங்கி வாழுகின்ற இப்போதய முகாசாபருரை தலமைஇடமாக கொண்டதால் ,ஒரு பிள்ளைக்கு அவன் பெயருக்கு முன்னால் அவனுடைய தந்தை யின் முதலெழுத்தை எழுதுவதைப்போல அடையாளச்சின்னமாக கூட்டுக்குடும்ப கிராம வாழ்க்கை நடைமுறையில் இருந்த காரணத்தால் பழையதை மறக்காமல் மதுரா.மு.பட்டி,என்றும்,மதுரா மு.பட்டிக்குடிக்காடு என்றும் இன்றளவும் இருக்கின்றது.
பெரியபரூர்,சின்ன்ப்பரூர்,மு.புதூர்,காட்டுப்பரூர்,மேல்மாத்தூர் எடைச்சத்தூர்
சிருவாம்பார்,வலசைபிஞ்சனூர்,,என்பவைஊர்களாகவும்,கோணாங்குப்பம்,சேனாகுப்பம்தொட்டிகுப்பம்,ரெட்டிக்குப்பம்,எருக்கன்குப்பம்,வீரரெட்டிக்குப்பம்,போன்றவைகள் குப்பங்க்களாகவும்,கிராமங்களின் பெயர்கள் அப்போதே பட்டயங்கள் சூட பட்டுள்ளது.அது இன்றும் ஆதாரபூர்வமாக உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களிலும் தலைவராக விளங்கியவர் ஆலய வழிபாடுகளாக இருந்தாலும் ,மத நல்லிணக்க சம்பிரதாய சடங்க்குகளாகயிருந்தாலும் சரி தலைமை தாங்குபவார்கள்.பளையக்காரர்ஆவர்கள்.அவர்களின்ஆட்ச்சிக்குஉட்பட்டது தான் மதுரா கிராமங்கள் ஆகும்.
அந்த மதுராவே இக்காலத்தில் பேருராட்ச்சி ,நகராட்ச்சி,ஊராட்ச்சி ,மாநகராட்ச்சி,என்றும் விளங்கி வருகின்றது . அப்போது
பாளையக்காரர் ஆண்டது தலைவராட்ச்சி, நமது சுற்று வட்டாரகிராமங்க்களை கட்டிகாத்த பெருமை திரு பாளையக்காரரை தவிர வேறு யாராலும் முடியாத விஷையமாகவே இருந்துவந்தது..
அதன் பிறகு இந்தியா சுதந்திரம்அடைந்ததபின்னரும்
பாளையக்காரர் ஆட்ச்சியே நீடித்தது . இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும் ஒரே தலைவர் ஆட்ச்சியா என்று மக்களுக்குள் மனக்குழப்பங்கள் எழுந்தது .எனவே பாளையக்காரரை மக்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்..துரை யின் பெயரில் கிராமங்களுக்குள் எதிர்ப்புகள் ஆரம்பித்தன .அப்போதுதான் அன்னை இந்திரா காந்தி நமது இந்திய நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தார்கள்.
இந்திராகாந்தி அம்மையார் அவசர ஆணை பிறப்பித்தார்கள்.அதாவது தமிழ் நாட்டில் பெரும்நிலக்கிழார்கள்,மற்றும் அதிகமாக நிலபுலன்ங்க்கள் வைத்திருப்போரிடமிருந்து ,நிலங்களை எடுத்து ஏழை,எளிய மக்களுக்கு நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் கொடுக்கும் அவசர ஆணையை பிறபித்த காரணத்தால் நமது துரை பாளையக்காரர் நிலங்களும் நமது சுற்று வட்டார ஏழை எளிய மக்களுக்கு நில உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் பிரித்து கொடுக்கப்பட்டது..அப்போதிலிருந்து திரு பாளையக்காரரின் வசமிருந்த தலைவர் பொறுப்புக்கும் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
அதன் பின்னர் அரசாங்கம் ஆணை பிரபித்தது ஊராட்ச்சி ,நகராட்ச்சி,பேரூராட்ச்சியாக மக்கள்தொகைக்கேற்ப மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்ததால் முதல் முதலாக முகாசாபரூரில் திரு பாளையக்காரரை எதிர்த்து போட்டியிட்ட திரு
மருதமுத்து அவர்கள் தலைவராக தேர்ந்த்தேடுக்கப்பட்டு வெற்றிப்பெற்றார் ,
திரு மருதமுத்து அவர்கள் தலைவர் பொறுப்பேற்று நமது சுற்று வட்டாரங்க்களை ஆட்ச்சி நடத்தி வந்தார் .அதன் பிறகு அரசாங்கம் ஆணை பிறப்பித்தது முகாசாபரூர் பேருராட்ச்சி யை பிரித்து ஒவ்வொரு கிராமங்களும் ஊராட்ச்சி மன்றங்களாகலாம் ,மேலும் அந்தந்த ஊர்களுக்கும் சொந்த கிராம மக்களே ஊராட்ச்சி மன்ற தலைவராகலாம் என்ற சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்த காரணத்தால் நமது ஊர் மதுரா மு.பட்டியும் ,மதுரா மு.பட்டிக்குடிக்காடும் சேர்ந்து மு.பட்டி க்கு தனி ஊராட்ச்சி மன்ற ம் ஆகும் தகுதியைப் பெற்று முதல் முதலாக மு.பட்டியின் ஊராட்ச்சி மன்ற தலைவராக மு.பட்டியைச்சேர்ந்த திரு இரா.சுப்பிரமணியன் அவர்கள் தலைவரானார்.
அதன்பிறகு இரண்டு பெண்ங்கள் உள்பட பட்டியை சேர்ந்தவர்களும்,பட்டிக்குடிக்காட்டைச் சேர்ந்த இரண்டு பேர்களும் ஊராட்ச்சி மன்றதலைவர்களாகவும்,உதவிஊராட்ச்சிமன்றதலைவர்களாகவும்,பொறுப்பேற்று நமது ஊரை இன்று வரையிலும் கட்டிக்காத்து வருகின்றார்கள் .என்பதால் நமக்கும் நமது ஊருக்கும் ,பேரும் ,புகழும்,அடைந்து வருவதை எண்ணி மனம் மகிழ்ச்சியடைகின்றது.
முன்பு நமது சுற்று வட்டார மக்களெல்லாம் நியாய விலை கூட்டுரவு மலிவு பொருட்கள் வாங்குவதற்கு முகாசாபருருக்குதான் சென்றுபொருள்களைவங்கிவரவேண்டியகட்டாயம் இருந்துவந்தது..இப்போது அந்த நிலைகள் முழுவதும் மாற்றமாகி அவரவர்கள் சொந்த ஊரிலேயே சொந்த ஊர்மக்களில் ஒருவரை ஊராட்ச்சி மன்ற தலைவர்,மற்றும் உதவி ஊராட்ச்சிமன்றத் தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமையை மக்கள் பெற்றிருப்பதும்,அனைத்து வித நியாய விலை பொருள்களையும் நமது ஊரிலேயே பெற்றிடவும், அரசாங்கம் வழிவகைச் செய்து நமது ஊரும் இந்த உலகத்தில் சொந்த காலில் நிற்க்கும் முழு அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதை எண்ணி நமது மக்கள் அனைவரும் ஆனந்த பெரு மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயமல்லவா .
எல்லா வளங்களும் நிறைந்த நமது ஊருக்குள் ஒரு அஞ்சல் அலுவலகமும், சிறு சேமிப்புக்கான அரசாங்க வங்கி கிளையும்,மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு வேண்டிய ஒரு அரசாங்க மருத்துவ சுகாதார மையமும்,தண்ணிர் கிடைக்காத நமது ஊருக்குள் எப்பொழுதும் தண்ணிர் தட்டுப்பாடு இல்லாத ஊராக விளங்கிட அரசாங்கத்தின் அனுகிரகம் கிடைத்துவிட்டால் ,!"நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது ,"என்பது போல ,நமது ஊருக்கு நிகர் வேறேது,என்றும் ,'"என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்'"என்பது போல" சொல்வதெல்லாம் கிடைக்கும் எங்கள் வளநாட்டில் " என்று நமது ஊரின் பெரும்புகழ் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும் .அதை எண்ணி நம்மூர் மக்களுள்ளம் மகிழ வேண்டும்.
நமது ஊர் மு.பட்டி , பட்டிகுடிக்காடு கிராமத்திற்கு அணுகவேண்டிய முக்கிய விபரங்கள் இந்த உலகத்தில்
,1)கண்டம் -ஆசியா,
2) தேசம் -இந்தியா,(பழைய பெயர் பாரதம் )
3)நாடு -தமிழ் நாடு ,
4)மாவட்டம் -கடலூர் (பழைய தென்னாற்காடு ,வள்ளலார் மாவட்டம் )
5)வட்டம் -விருத்தாசலம் வட்டம் ,(பழைய பெயர் திருமுதுக்குன்றம் ,விருதை,)
6)தலைக்கிராமம் முகாசாபரூர் ,(பழையபெயர் பேரூர்-பெரியபரூர்.)
7) எங்கள் சொந்த ஊர் -மதுரா மு.பட்டி,- மதுரா மு. பட்டிகுடிக்காடு,)
8)எங்கள் ஊர்க்கு சுற்றுவட்டார கிராமங்கள் -
வடதிசையில் மு.பரூர் ,
தென்திசையில் -தொட்டிக்குப்பம்,
-கீழ்த்திசையில் -வடவாடி
,-மேல்திசையில் -மு.புதூர்.
மற்றும் சின்னபரூர்,கச்சிப்பெருமானத்தம்,மேமாத்தூர்,கோணங்க்குப்பம் ,பெரியவடவாடி,விஜயமாநகரம்,எருமனூர்,சிவனாற்குப்பம்,எடைச்சத்தூர்,சிருவாம்பார்.கர்ணத்தம் .காட்டுபரூர்,அகரம்.மங்கலம்பேட்டை.இராஜபாளையம் ரெட்டிகுப்பம்.எருக்கன்குப்பம்.போன்ற சுற்றுவட்டார கிராமங்களாகும்.
9) பள்ளிகள் -அரசினர் ஆரம்பபள்ளி,அரசினர் ஆதிதிராவிட ஆரம்பபள்ளி,
10) அரசினர் உயர்நிலை பள்ளி முகாசாபரூர் ,
11) விருத்தாசலம் கொளஞ்சியப்பார் அரசு கலைக்கல்லூரி.
12)ஆலயங்கள் -படவேட்டையம்மன். கோயில் -மன்மதன் கோயில்-மகா மாரியம்மன் கோயில் ,பெரியநாயகியம்மன் கோயில் ,ஆனந்தாயியம்மன் ,மருவத்துரம்மன். கோயில் ஐயப்பன் கோயில் போன்றவைகள் எங்கள் சொந்தஊர் கோவில்தலங்களாகும்.
13)விருத்தாசலம் -விருத்தகிரிஷ்வரர் -விருத்தாம்பிகை பழமலைநாதர் பெரியகோவில்,
மணவாள நல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக் கோவில், மங்கலம்பேட்டை -மங்கநேஷ்வர கோயில், ---கோனாங் குப்பம் -புனிதமேரி மாதா திருத்தலம் -துரோபதையம்மன் கோயில் -அங்காளபரமேஸ்வரி கோயில் ,ஈஸ்வரன் கோயில்,அய்யனார்கோயில்,போன்றவைகள் சுற்றுவட்டார திருத்தலங்களாகும்.
எங்கள் ஊருக்கு பேருந்து மார்க்கம் விருத்தாசலத்திலிருந்து சிருவாம்பார் செல்லும் வழியில் முதல் எருமனூர்,இரண்டாவது ரெட்டிகுப்பம்,மூன்ராவது தொட்டிகுப்பம்,-**நான்காவது நிறுத்தமே எங்கள் ஊர் மு.பட்டி பேருந்து நிறுத்தமாகும்.
எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் அவரவர் கிராமங்களில் ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வந்தாலும் , முகாசாபரூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் தான் உயர்நிலை பள்ளிபடிப்புக்காக வந்து படிக்கவேண்டும்.என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நான் பிறந்த ஊரின் பெருமையையும்,புகழையும்,நான் பயின்ற பள்ளியின் ஆசாரியர்கள் ,எனது பெற்றோர்கள் மூலமாகவும்,நான் அறிந்தவற்றை இணைய தளம் மூலமாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதுடன் ,எனது ஆசரியர்கள் பெருந்தகைக்கும்,என்னை ஈன்ரெடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகபடுத்திய என் அம்மா அகிலாண்டம்மாள், அப்பா ப.இராமசாமிக்கும் ,மிக்க நன்றியையும்,வணக்கத்தையும், இதன்மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
, மேலே குறிப்பிட்டுள்ள மதுரா மு.பட்டி,மற்றும் மதுரா மு,பட்டிக்குடிக்காட்டின்பெயர்கள்வேறபாட்டினையும் ,மற்றும் முற்காலத்தில் நமதுஊர்களைஆண்டபாளையக்காரர்வரலாற்றையும்,எனக்குதெரிந்தவற்றையும்,நமது முன்னோர்களிடம் கேட்டறிந்த விபரங்களையும் இதன் மூலம் இணையதளத்தில் எழுதி இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டி மனம் மகிழும் உங்களின் அன்பன் .
மு,பட்டிக்குடிக்காடு .இரா.கோவிந்தராசு ,
குஜராத் மாநிலம், சாபர்மதி, அகமதாபாத்.
தேதி.06-07-2014
(குறிப்பு) ,மேலே உள்ள வரலாற்று விபரங்கள் முன்னோர்களிடம் ,கேட்டரிந்தவையும்,நான் ஒரு சிலவற்றை கண் கூடாக நேரில் பார்த்தவையும்,இங்கே தெரிவித்துள்ளேன் .இன்னும் எவ்வளவோஎனக்கு தெரியாதவைகள் இருக்க கூடும், எனவே நமது ஊரின் விபரங்கள் தெரிந்தவர்கள் இந்த தொலை தொடர்பு எண்ணில் (09879042958) தொடர்புக்கொண்டு விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.
நன்றி , வணக்கம்.

No comments:
Post a Comment