" பொன் மொழிகள் "
அம்மாவின் அன்பான நல்லாசியும்
அப்பாவின் அருள் வாக்கும்,
குருவின் நல்ல உபதேசமும்,
இம்மூன்றும்
ஒருவர் வளமான வாழ்க்கையில்
நிழல் போன்று எப்பொழுதும்
உறுதுணையாக இருக்கும்.
மேலே உள்ள மூன்றையும்
எவன் ஒருவன் உதாசின
படுத்துகின்றானோ அவன்
வாழ்க்கையில் வசந்தத்தை
இழந்து இருட்டறையில்
தடுமாறுவது நிச்சயம் உறுதி !
பட்டிக்குடிக்காடு ஆர்.கோவிந்தராசு
(29-07-2014)
அம்மா உயிர்மூச்சு ,
அப்பா உடம்பின் குருதி,
மனைவி இரு கண்கள்,
பிள்ளைகள் கை, கால்கள்
ஆனால் ,
நீயோ அவர்களின் உலகம் .!
நீ தான் அவர்களின் இதய
நாடி துடிப்பும், !
கோடி ,கோடியாக பணங்கள்
குவியாவிட்டாலும்
ஓடி வந்து ,உன்னருகில்
வாடிய நேரத்தில் வந்து
உதவுபவன் எவனோ
அவனே உண்மையான
உற்றத் தோழனாவான் .!
ஆடுவான் மயிலாட்டம்,
பாடுவான் குயில்பாட்டு
ஆனால் ,
நீ வாடும்போது மட்டும்
ஓடுவான் எவனோ
அவனில்லை
உற்றத் தோழன்.!
பெண்கள் நாட்டின் கண்கள்
அவளே சமுதாய நலத்தின்
பெரும் தூண் கள் ,!
ஆண்களைப்போல
பெண்களை சமமாய்
அகில உலகமே மதிக்கணும்,!
தாய்,தந்தையை தள்ளி
வைக்காதே,
தாரத்திற்கு என்றுமே
பழிகள் நீனைக்காதே,!
பிள்ளைகள் பெறுவதும்
பேணிகாப்பதும்பெண்கள் ,
தொல்லைகள் வந்தாலும்
துயரமில்லாமல் ,
தொண்டுகள் செய்வதும்
பெண்கள் ,!
சேற்றில் இறங்கி
நாற்று நடுகின்ற
ஆற்றல் மிகுந்த பெண்கள் ,
அவள் ஆற்றும் கடமைக்கு
அளவேயில்லை
போற்றவேண்டிய
நமது பெண்கள்.!
பட்டிக்குடிக்காடு .ஆர்.கோவிந்தராசு .
(29-07-2014)
No comments:
Post a Comment