Wednesday, 27 August 2014

"உன்னத திருநாள் திருமண பொன்னாள்"

"உன்னத   திருநாள்
திருமண பொன்னாள்"

திருமண மேடைக்கண்ட
திகட்டாத நன்னாள்
இருமனம் ஒன்றுசேர்ந்த
இன்பமான பொன்னாள்
உல்லாசப்பறவைகளாய்
ஒன்றிணைந்த அன்னாள் -நல்
ஒளிவிளக்கு ஏற்றிவைத்த
உன்னதத் திருநாள்.
பத்தாண்டு  இல்வாழ்க்க
பயணித்த தம்பதியே
புத்தாண்டு பதினொன்றில்
புகுகின்ற  இந்நாளில்,
முத்தான  பதியுனக்கு 
முக்கண்ணன் பரிசளித்தான்
 

சுட்டியான மழலைரெண்டு
குட்டியப்பார் அருள்பாலித்தார்
வற்றாதப்  பொய்கையைப்போல் 
வளமான  வாழ்வு பெற்று
வையத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்திடவே,
பொன்னான திருநாளாம்
திருமண  நாள் நன்னாளில் 
உற்றோரும்,பெற்றோரும்
உளமார பாராட்டி
நல் வாழ்த்து  நவில்கின்றோம்
தங்கள் இல் வாழ்க்கை
சிறந்திடவே. !

அன்புடன்,
ரா.கோவிந்தராசு, கோ.கண்ணகி,
கோ.ராஜலக்ஷ்மி, கோ.ராகுல்,
ரா.அகிலாண்டம், க.அஞ்சலை,
அ.கொளஞ்சி, கொ.செல்வம்பாள்,
கொ.குமார், கொ.குமாரி, கொ.அருண்
தேதி: 27/08/2014

No comments:

Post a Comment