Monday, 4 April 2016

" பேரிடராய் வந்த பெருமழை "

வந்தாரை வாழ வைக்கும்
செந்தமிழ் நாட்டில்
குந்தகம் விளைவித்து
கொடுமைகள் தந்து
பேரிடராய் வந்த பெரு மழையே!.....
யாரிடம் கேட்டுயிங்கு
எமன்பழி சுமக்க வாந்தாய்?.
கூரியது யாருனக்கு  ? கொட்டும் மழையாக கொடுமை தர வாவென்று !....
தூரிய தொடர் மழையே!.... உன்னால்
மாரியது மாநகரமெல்லாம்
மாபெரும் சமுத்திரமாய் !.....
ஏரிகளில் நிறம்பிய நீர்
ஊரினில்  புகுந்ததினால்,
வீரிய பெரு வெள்ளம்
வீடுகளை சேதமாக்கி
குந்த இடமில்லை குடிக்கும் நீரில்லை,
உண்ண உணவுமில்லை
உண்டுரங்க இடமுமில்லை,
உடுக்கும் உடையுமில்லை,
படுக்க இடமில்லாமல்
நடுக்கும் உடலோடு மக்களை
நடுத்தெருவில் வாழ்க்கை
கோலமாக்கி,
குப்பத்து வீடுகளை கூண்டோடு
அழித்து விட்டு,
தெப்பத்தில் மிதப்பது போல்
மக்களுடைமைகளை
தெரு வெள்ளத்தில் மிதக்க விட்டாய் !....
மாடி வீட்டு மக்களையும்-தெரு
கோடியிலே தள்ளி விட்டு,
விடியும் வரை தூங்காமல்
விழித்தவர்கள் பல இலட்சம் !......
இடி மின்னல் தாக்கியதில்
மடிந்தவர்கள் சில பேரு
பிடி சோறு கிடைக்காமல்
துடித்தவர்கள் பல நூறு !.....

கூவி உன்னை அழைத்த போது
கங்கா  தேவி நீ வராமல்-மக்கள்
ஆவியை பரிப்பதற்க்கா ?... மகா
பாவியாக உருவெடுத்தாய் !.....

நூறாண்டு காலத்தில் இப்பெரிய
நூதனத்தை யாரும் கண்டதில்லை
வீருக்கொண்ட பெரு வெள்ளம்
ஊருக்குள் புகுந்ததினால்
காரு,பங்களாவும்,கடல்மீது
மிதப்பதுபோல் வேரு வழியின்றி வெள்ளத்தில்  விணாகி போனதய்யா!....

பேரிடர் மீட்பு குழுவின் பேருதவி
இல்லா விட்டால்,
போரினில் மடிந்தார் போல்
மனித உடல் போராக குவிந்திருக்கும்,
பன்னாட்டு சேனாக்கள் பறந்து வந்து
தன்னார்வ தொண்டு செய்து
எந்நாட்டு மக்கள் உயிரை
எளிதாக மீட்டனரே!.....

மீனவ சமுதாயம் தானாக முன் வந்து
மிதந்து போன உடைமைகளை
மீட்டு தந்த பேருதவி நாட்டு மக்கள்
போற்றும் நல்ல நற்குணத்து
உயர் குணங்கள்!......

பார்த்தாயா பராசக்தி-மக்கள்
படுந்துயர காட்சிதனை!.....
கங்கா தேவியான நீ.....
காளி ரூபம் கொண்டதேனோ?...
ஆங்கார ரூபம் கொண்டு
அடை மழையாய் பொழிந்ததேனோ?...
பூங்கா நகரமெல்லாம்
பூண்டோடு அழித்ததேனோ?....
சிங்கார சென்னையை நீ
சின்னா பின்னமாக்கியதேனோ?...

பறந்ந கடல் போல பட்டணத்தை
மூழ்கடித்து, இறந்த சடலங்களை
எரிப்பதற்கு இடமில்லாமல்
பிறந்த கை குழந்தையுடன்
பெற்றோர்கள் கதரும் காட்சி
மறக்க முடிய வில்லை மழையே!....
நீ செய்த பெரும் வீழ்ச்சி !....
பொருக்கவும் முடியவில்லை
தமிழ் நாட்டில்   பெரு மழையாய்
பொங்கி எழுந்த உன் சூழ்ச்சி!......

சுனாமி என்ற பேரில் தமிழகத்தை
சுக்கு நூறாக்கி விட்டாய் !....
பினாமியா எம்மக்கள்   தமிழகத்தில் பேரிடரை தருகின்றாய்,
பூகம்பம் என்ற பேரில்
பேரதிர்ச்சி தருகின்றாய்
இயற்க்கையின் சதிக்கொடுமை
இனி வேண்டாம்  தமிழ் தாயே !!!
என்று நாங்கள் வணங்குகின்றோம்
மகா மாரி(அம்மா)உனையே !!!!....


( தமிழ் நாட்டில் 01-12-2015-/04-12-2015 இல் பெய்த பெரு மழை வெள்ள சேதத்தின் போது எழுதியது,)
pattikudikadu r govindharaju
     
          கவிஞர்.பட்டிக்குடிக்காடு
இரா,கோவிந்தராசு
கை பேசி/ 09879042958
இ,மெயில்/
e.mail. Govindharaju 1209@gmail.com
e.mail.pattikudikadurg1205@gmail.com

No comments:

Post a Comment