Saturday, 26 March 2016

" தாய் குலமே தயங்காதே"

     "தாய் குலமே தயங்காதே "
--------------------------------------------------------------
ஆக்கும் சக்தியும் பெண்
அணைக்கும் சக்தியும் பெண்!
காக்கும் கரமும் பெண்
கருணை உள்ளமும் பெண்!
ஊக்கம் தருவதும் பெண்
உயிர் காப்பதும் பெண் !....
கருவை உருவாக்கி,
கற்ப பையை கோவிலாக்கி,
பத்து மாதம் சுமந்தெடுத்து,
பாசமிகு அன்னையாக
பெற்று வளர்ப்பதும் பெண்
பேணிக்காப்பதும் பெண் !,
குற்றம் செயாமலே இங்கு
கொடுமைகள் சுமப்பது பெண் !....
துக்கம்  வாழ்க்கையில் வந்தாலும்
துயரபடாமல் துணிந்து நின்று
துயர் துடைப்பவள் பெண் !.....
தூங்கி எழும் குழந்தையை தன்
தோளில் சுமந்து தூங்க வைக்கும்
தூய உள்ளம் பெண் !.....
வீணை பிடித்தவள் பெ ண்
வீர வாள் பிடித்தவள் பெண் !....
தனம் தருபவள் பெண்
தானம் செய்பவளும் பெண்!.....
மானம் காப்பவள் பெண்
மங்கையர் திலகமாய் பெண் !....
பானை பிடித்தவள் பெண்
பதிவிரதை பத்தினியும் பெண் !.....
தேனையும் மிஞ்சும் திருமேனி
தெய்வ தாயும் ஒரு பெண் !.......
வானையும் தொட்டவள் பெண்
வயலில் உழைப்பவளும் பெண்!......
ஆணையும் படைத்தவள் பெண்
அகிலத்தை படைத்தவள் பெண்!.....
யானையைப்பேல பலமிருந்தும்,
பூனையைப்போல  பதுங்காமல்
சேனைப் படையாய் ஒன்றுதிரண்டு
உலகில்  செயித்து காட்டுவோம்
பலமாய் வா முன்னே!,,.....
சிரம் நிமிர்ந்து உங்கள் கரம் உயர்த்தி ,
சிங்க நடையில் வா பெண்ணே !.  
ஆக்கும் திரனை படைத்த எங்கள்
 அழகு மங்கை புதுமை பெண்களே!.......
காக்கும் கரங்களாய் ஒன்று சேர்ந்து
நம்மை -
தாக்கும் சக்தியை  வீழ்த்திடுவோம் !.
தாய் குலத்தை  காத்திடுவோம் !......

    "  உலக மகளிர் தின நாள்"  விழா

         மங்கையர் மலர்
        "காக்கும் கரங்கள்"
    அகமதாபாத் ,   குஜராத்,
           நாள்-27-03-2016.
             
          அன்பு இதயமுடன்,
கவிஞர். பட்டிக்குடிக்காடு,
இரா,கோவிந்தராசு.
   அழைப்பு, 09879042958
e.mail. Govinndharaju 1209@gmail,com
email.pattikudikadurg1205@gmail,com

4 comments:

  1. Ungal kavithaiyai padika thudithen. Kavithaiyai padithen. Kavithaithuvathai rasithen. Karkandai rusithen. Penmaiyin thanmaiyin unmaiyai menmaiyai pen maiyaal penkalin kan maiyaai theettiyathai kandu viyanthen. Vaazhthukkal.

    ReplyDelete
  2. எனது ஆருயிர் நன்பரே! உயர்திரு கணக்கண் காமராஜ் அவர்களே ! நான் எழுதிய உலக மகளிர் தின விழாவிற்க்காக அகமதாபாத் குஜராத் மகளிர் நடத்திய காக்கும் கரங்கள் சேவாவிற்கு என்இதயத்தில் பதிவான சொற்றொடரை எழுத்து வடிவில் பதித்து இணையதளத்தின் மூலம் "தாய் குலமே தயங்காதே" என்று புகழாரம் பெண்களுக்காக சூட்டியதை தாங்ள் என்னுடய பிளோகர் போஸ்டை படித்து ரசித்து, என்னையும் இந்த உலக பெண் இனத்திற்க்கும் பாராட்டுகளை வாரீ வழங்கீய என்னுயிர் தோழரே!....தங்களின் இந்த பாராட்டு எனக்கு தங்க பதக்கமே பெற்றது போலாயிற்று.தங்களின் போற்றுதல் எனக்கு கிடைத்த பொக்கிஷாமாக ஏற்றுக்கொண்டு ,எனது நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகின்றேன்!.வாழ்க வளமுடன் !.

    ReplyDelete
  3. எனது ஆருயிர் நன்பரே! உயர்திரு கணக்கண் காமராஜ் அவர்களே ! நான் எழுதிய உலக மகளிர் தின விழாவிற்க்காக அகமதாபாத் குஜராத் மகளிர் நடத்திய காக்கும் கரங்கள் சேவாவிற்கு என்இதயத்தில் பதிவான சொற்றொடரை எழுத்து வடிவில் பதித்து இணையதளத்தின் மூலம் "தாய் குலமே தயங்காதே" என்று புகழாரம் பெண்களுக்காக சூட்டியதை தாங்ள் என்னுடய பிளோகர் போஸ்டை படித்து ரசித்து, என்னையும் இந்த உலக பெண் இனத்திற்க்கும் பாராட்டுகளை வாரீ வழங்கீய என்னுயிர் தோழரே!....தங்களின் இந்த பாராட்டு எனக்கு தங்க பதக்கமே பெற்றது போலாயிற்று.தங்களின் போற்றுதல் எனக்கு கிடைத்த பொக்கிஷாமாக ஏற்றுக்கொண்டு ,எனது நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகின்றேன்!.வாழ்க வளமுடன் !.

    ReplyDelete
  4. உலக மகளிர் தினத்திற்க்காக நான் எழுதிய "தாய் குலமே தயங்காதே" என்ற கவிதையை இணைய தளத்தில் படித்து எனக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள என் ஆருயிர் நன்பராக என்னுடன் பணியாற்றும் ,எப்பொழுதும் நான்அன்பாக அழைக்கும் தம்பி கூந்தலூர் மு,சுப்ரமணியனை நான் மனமார பாராடுகினன்றேன்.நீவிர் வாழ்க வளமுடன்.நன்றி.

    ReplyDelete