Sunday, 18 May 2025

"சொக்கத்தங்கம் விளையும் பூமி "


அடர்ந்த ஆலமரம்
அருகில் கல்விக்கூடம்,
படர்ந்த மணல்பரப்பில் ,
படுத்து நான் உறங்கி வந்த,
கடந்தகால நினைவுகளை
இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
எப்போதும் நான் மறவேன்
இனிமையான என் ஊரும்
மு .பட்டிகுடிகாட்டின்
அழகான மண்வீடு
புகழான அம்மன்கோவில்
பழங்காலம் தொன்று தொட்டு
உழுத விளை  நிலங்கள்
தொடர்ந்து நடந்து சென்றால்
படர்ந்த மலர்செடிகள்
கொல்லைக்கு செல்லும்போது
உள்ளத்தை குளிரவைக்கும்
மல்லிகை முல்லைபூக்கள்
மனம்கமழும் வாசம் தரும்..!
பாலைவன பூமியெல்லாம்
சோலைவன எழில் பொங்கும்
சாலையெங்கும் மாந்தோப்பும்
வாழை மரதோப்பும்
வானளாவும்  தென்னை
மரந்தோ ப்பும்,
ஏ ழை களை  மகிழ வை க்கு ம்
கா ன கத்து  கனி  வளமும்
கண் ணைக்  குளி ர  வைக்க்கும்
தென்னை  மர த்  தோ ப் பு களும்
என்னிப் பார் க்க முடியாத
இதமான குளுங் கா ற்று ம்
எம் மண்ணின்
பெருமை வாய்ந்த
மகத் தா ன  அ ற்புதங்கள்
மா , பலா , வாழை எனும்
முக்கனிகள்  விளையுமிடம்
மன்னராலே போற்றப்படும்
முந்திரிகள் காய்க்குமிடம்
கம்பு ,சோளம் ,வரகு
கேழ்வரகும் ,
நெல்லும் ,கொள்ளும் ,
கரு உளுந்து  மொச்சைகளும்
விளைந்து களம் குவியும்,
வேம்பு, பூவரசு
விலையுயர்ந்த தேக்குகளும்
நான்கு திசைநோக்கின் ,
நன்மைதரும் மரவளங் கள்
பச்சை  காய் கறியும்
பவழம்போல் தக்காளியும்
மொ ச் சை  பயிர்வகையும்
எலுமிச்சை கனிகிடைக்கும்
சுக்கு ,மிளகு ,சோம்பு
சுவை சேர் க்கும்  கசகசா வும்
திப்பிலி ,கிராம்பு ,ஏலம் ,
இவை நீங்கி ,
வாழைக் குலைத் தள்ளி
தானாய்  பழம் பழுக்கும்
சோழ  பூமி எங்கள்
சொக்கத்தங்கம் விளையும் ஊரில் 
படித்தவர்கள்  இங்கே பலருண்டு 
அவர்களாலே எங்கள்  ஊர் 
பட்டிக்குடிகாட்டுக்கு பெருமையுண்டு .

பட்டிக்குடிக்காடு  இரா .கோவிந்தராசு

சாபர்மதி , குஜராத் மாநிலம்
தேதி . 11.05.2014

Saturday, 16 April 2016

நூல் வெளியீட்டு விழா " வாழ்த்து செய்திகள்"

  "  நூல் வெளியீட்டு விழா  "  வாழ்த்துச்செய்தி!!!
கவிஞர்,எம்.இ.பிரபாகர பாபு அவார்களுக்கு !!!!

கவிஞர்.பட்டிக்குடிக்காடு. இரா,கோவிந்தராசு, குஜராத்.சாபர்மதி.
****************************************
   நூலின் பெயர்,

  "    ஒரு கடல் ஒரு கை விளக்கு " !
********-********************************
நூல் ஆசரியர்,

கவிஞர் ,  எம்.இ, பிரபாகர பாபு  அவர்கள்

, பணி ஓய்வு   துணை பொது மேலாளர், பேங் ஆப் இந்தியா! சென்னை,

நாள் -17-04-2016.

 இடம்  எழும்பூர், சென்னை.
--------------------*------------------------------------------

   மேதகு  வைரவரி கவிஞர் ,  M E .பிரபாகர பாபு அவர்கள் திவ்விய சமூகத்திற்கு எனது முதற்க்கண் வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன் .!


நான் பல வருடங்களாக  கவிஞர் பிரபாகர பாபு அவர்களை நன்கு அறிவேன்.

இவர் எழுதி வெளியிட்டுள்ளது 34 நூல்களாகும்,  கவிஞர் பிரபாகர பாபு அவர்கள் எழுதிய நூல்களை படித்து மகிழ்ந்தவர்கள் பட்டியலில் நானும் ஒருவன் என்பதால் பெரு மகிழ்ச்சி யடைவதுடன் மட்டுமல்லாமல்  , என்னையும் ஒரு கவிஞனா க்கிய இக்கவி புலவரை எனது குருவாகவும்  ஏற்று வணங்குகின்றேன்!
இக்கவியரசர் ஒரு கவிஞர் மட்டுமல்ல,.....!   கவி இருக்கும்  நூல் களஞ்சியம்  என்றால்   மிகையாகாது,
இக்கவி புலவரால் வார்க்கப் பட்ட சங்க கால இலக்கியங்கள் ,இக்கால பாமர மக்களும் படித்து பொருளறியவும்  அதன் பயன் பெறவும்,தனது ஆற்றலினால்புதிப்பிக்கப்பட்ட   சங்க இலக்கிய நூல் முத்தொள்ளாயிரம் ,பத்து பாட்டு,எட்டுத்தொகை, பதிற்று பத்து ஐங்குறுநூறு, குறுனந்தொகை,நற்றினை,ஆத்திச்சூடி கட்டுரைகள்,சந்த கவிதைகள், புதுக்கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள்,பொன்மொழிகள், மற்றும் மொழிப் பெயர்ப்புகள் ஏராளமான சாதனைகள் படைத்த சாம்பவானாக விளங்கும்  கவிஞர் பிரபாகர பாபு அவர்கள் இவ்வளவு பெரிய சாதனையாளராக விளங்குவதற்கு காரணமானவர்களாகிய இவரின் பெற்றோர்கள் முதல் காரணம் இரண்டாம் காரணம் இவரின் நல்ல குருக்கள் ,மூன்றாவதாக இருக்கும் மிக முக்கியநபராக விளங்குபவர் தான் இவரின் இல்லத்தரசி,துணைவி,மனைவி தூணாக நிற்க்கும் இவரது சுமைத்தாங்கி,அன்பின் இலக்கணமாக விளங்கும் இவரது அருமை  மனையாள் திருமதி பிரபாகர பாபு ஆகும் !!!!.
ஒவ்வொரு  ஆண் சாதனையாளருக்கு பின்னால்  ஒரு பெண் அங்கம் வகிப்பார்கள். இதற்கு சான்று , அடையாளம் என்றால்  திருமதி பிரபாகர்பாபுவை சேறும்!.
கவிஞர் பிரபாகர பாபுவின் 34 நூல்கள் படைப்பாற்றலுக்கு ஊக்கமும், ஆக்கமும் ,கொடுத்து, உருதுணையாக இருந்தும்,  இவருடைய எழுத்தாற்றலுக்கு பக்க பலமாக இருந்து  செயல் பட்ட திருமதி பிரபாகர பாபு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை இவ் வாழ்த்து செய்தி மூலமாக உரித்தாக்குகின்றேன் !!!.
மேன்மேலும்  கவிஞர் பிரபாகர பாபு அவர்களின் தமிழார்வத் தொண்டு இத்தரணியெங்கும் காற்றலையாக பரவட்டும்!.......
ஒட்டு மொத்த உலக தமிழர்களெல்லாம்  எட்டு தொகை, பத்து பாட்டுகளையும்,சங்க இலக்கியங்கள் யாவையும் படித்து மகிழட்டும் என்று !!!!...
வாயால் அல்ல,வார்த்தைகளால் அல்ல  , என் இதய பூர்வமாக  கவிஞர் பிரபாகர பாபுவின் அளப்பறியா தமிழ் ஆர்வத்தையும்,தமின், தமிழுக்காக ஆற்றி வரும்அறிய நற்த்தொண்டை பாராட்டி,இவரை வாழ்த்தி வணங்குகின்றேன் !!!!.
இந்த தருணத்தில்  எனது குரு ஆசான்களை நினைவு கொண்டு
1)முதல் குரு கவிஞர் பட்டிக்குடிக்காடு.மு.கதிர்வேலு,
2)காரைக்காலை சேர்ந்த திரு சண்முக சுந்தரம் அவர்கள் சாந்த்கேடா தமிழ்ச்சங்க  "தமிழோசை" முதன்மை ஆசரியர்.
3) கவிஞர்,பிரபாகர  பாபு அவரகள். எனக்கு ஆக்கமும்,ஊக்கமும் கொடுத்து என்னை எழுத்துலக இலக்கிய கவிஞனென்றும்,பாவலர் என்றும் வாழ்த்திவரும் "என் நெஞ்சில் நீங்கா கவியரசராக திகழும் " திரு கவிஞர் பிரபாகர பாபு ஆகும்.
4) திரு .மு,சுப்ரமணியம் அவர்கள், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து கவியெழுத தூண்டு கோலாக விளங்கும் நான் அன்பாக அழைக்கும் தம்பி கூந்தலூர் மு.சுப்ரமணிம்ஆகும்.அனைவரையும் வணங்குகின்றேன்,!!!!.

கவிஞர் பிரபாகர பாபு அவர்களை வாழ்திய புலவர் பெருமான்களும், ஆன்றோர்களும்,சான்றோர்களும்,கவிஞர் பெருமான்களும் பேராசாரியார்களும், முனைவார்களும்   எண்ணிலடங்கா!!!!....

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் ஏராளம்!.......
இவர் கலந்துக்கொண்ட கவியரங்கங்களும், பட்டி மன்றங்களும் ஏராளம் !!!....
இக்கவியரசரின் தமிழார்வத்தின் தாராளமனமே இதற்கு இவரிடமுள்ள ஆதார சான்றுகளே ஆகும்!.
பணி ஓய்வு பெற்ற பின்னரும் சமூக சேவைகள் புரிந்து எண்ணிலடங்கா உதவிகள் புரிந்து வாருகின்றார்.

வாழ்க தமிழ்! வளர்க கவிஞர் பிரபாகர பாபுவின் தமிழ் நற்த்தொண்டு!!!!!....!


இதயமுடன் வாழ்த்தும் நெஞ்சம்.


    கவிஞர்.பட்டீக்குடிக்காடு.இரா.கோவிந்தராசு.
நன்றி! வணக்கம்!
தேதி,16-04-2016.     தொடர்புக்கு
கைபேசி.09879042958.
e/mail. Govindharaju 1209@gmail,com.
my blogger,pattikudikadu r govindharaju,

Wednesday, 13 April 2016

"முத்திரை பதிதத்த சித்திரையே வருக"

அன்னை தமிழ் மகளே
அன்பு திரு மகளே,
உன்னை காண்பதற்கு
ஒரு வருசம் காத்திருந்தோம்!....
 தமிழ்-
மண்ணை குளிர வைத்து
மக்களை மகிழ வைக்க
பெண்ணாக  உருவெடுத்து
பிறந்து வரும் சித்திரையே!...

து ர் (ன்)முகி பெண்ணுருவில்
நின்  திரு மேனி அவதரித்து
பொன்னருள் புரிந்திடவே
பொற்பாதம் பதிக்கின்றாய் !...

மன்மத ஆண்டு சித்திரைபோல்
மாற்றங்கள் தந்திடாமல்
உன்னருளால் உலக மக்கள்
உயர்நிலை பெற வேண்டும்!...

பின்னகம் வராமல் கொடிய
பிணிகளும் அண்டாமல்
அன்ன களஞ்சியமாக்கி நல்
அருள்புரிய வேண்டுகின்றோம் !...

இன்னல்கள் பறந்தோடி இன்பங்கள் மிகுந்து
எண்ணங்கள் ஈடேரி  எல்லையில்லா
மகிழ்ச்சி பொங்க
வண்ண உடையணிந்து வலது கால்
முன் வைத்து,
அன்ன நடை நடந்தது,அழகு தேவதையாய்
உன் தாய் வீட்டு தமிழகத்தில்
புத்தாண்டு  பொன் மகளாய்
முத்திரை  பதித்த எங்கள்
சித்திரை திருமகளே வருக !.. உந்தன்
முகம் பார்த்து மகிழ்திடுவோம்
முத்தான தமிழ் மகளே !... எங்களுக்கு
இன்பம் தருக !!!!

     அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  !.

   அன்புடன்,
கவிஞர்,பட்டிக்குடிக்காடு,இரா,கோவிந்தராசு,
நன்றி வணக்கம்!.   14-04-2016

my wepsite blogger
pattikudikadu r govindharaju
கைபேசி.09879042958

e mail/ govindharaju1209@gmail,com
e.mail/pattikudikadurg1205@gmail.com
  

Monday, 4 April 2016

" பேரிடராய் வந்த பெருமழை "

வந்தாரை வாழ வைக்கும்
செந்தமிழ் நாட்டில்
குந்தகம் விளைவித்து
கொடுமைகள் தந்து
பேரிடராய் வந்த பெரு மழையே!.....
யாரிடம் கேட்டுயிங்கு
எமன்பழி சுமக்க வாந்தாய்?.
கூரியது யாருனக்கு  ? கொட்டும் மழையாக கொடுமை தர வாவென்று !....
தூரிய தொடர் மழையே!.... உன்னால்
மாரியது மாநகரமெல்லாம்
மாபெரும் சமுத்திரமாய் !.....
ஏரிகளில் நிறம்பிய நீர்
ஊரினில்  புகுந்ததினால்,
வீரிய பெரு வெள்ளம்
வீடுகளை சேதமாக்கி
குந்த இடமில்லை குடிக்கும் நீரில்லை,
உண்ண உணவுமில்லை
உண்டுரங்க இடமுமில்லை,
உடுக்கும் உடையுமில்லை,
படுக்க இடமில்லாமல்
நடுக்கும் உடலோடு மக்களை
நடுத்தெருவில் வாழ்க்கை
கோலமாக்கி,
குப்பத்து வீடுகளை கூண்டோடு
அழித்து விட்டு,
தெப்பத்தில் மிதப்பது போல்
மக்களுடைமைகளை
தெரு வெள்ளத்தில் மிதக்க விட்டாய் !....
மாடி வீட்டு மக்களையும்-தெரு
கோடியிலே தள்ளி விட்டு,
விடியும் வரை தூங்காமல்
விழித்தவர்கள் பல இலட்சம் !......
இடி மின்னல் தாக்கியதில்
மடிந்தவர்கள் சில பேரு
பிடி சோறு கிடைக்காமல்
துடித்தவர்கள் பல நூறு !.....

கூவி உன்னை அழைத்த போது
கங்கா  தேவி நீ வராமல்-மக்கள்
ஆவியை பரிப்பதற்க்கா ?... மகா
பாவியாக உருவெடுத்தாய் !.....

நூறாண்டு காலத்தில் இப்பெரிய
நூதனத்தை யாரும் கண்டதில்லை
வீருக்கொண்ட பெரு வெள்ளம்
ஊருக்குள் புகுந்ததினால்
காரு,பங்களாவும்,கடல்மீது
மிதப்பதுபோல் வேரு வழியின்றி வெள்ளத்தில்  விணாகி போனதய்யா!....

பேரிடர் மீட்பு குழுவின் பேருதவி
இல்லா விட்டால்,
போரினில் மடிந்தார் போல்
மனித உடல் போராக குவிந்திருக்கும்,
பன்னாட்டு சேனாக்கள் பறந்து வந்து
தன்னார்வ தொண்டு செய்து
எந்நாட்டு மக்கள் உயிரை
எளிதாக மீட்டனரே!.....

மீனவ சமுதாயம் தானாக முன் வந்து
மிதந்து போன உடைமைகளை
மீட்டு தந்த பேருதவி நாட்டு மக்கள்
போற்றும் நல்ல நற்குணத்து
உயர் குணங்கள்!......

பார்த்தாயா பராசக்தி-மக்கள்
படுந்துயர காட்சிதனை!.....
கங்கா தேவியான நீ.....
காளி ரூபம் கொண்டதேனோ?...
ஆங்கார ரூபம் கொண்டு
அடை மழையாய் பொழிந்ததேனோ?...
பூங்கா நகரமெல்லாம்
பூண்டோடு அழித்ததேனோ?....
சிங்கார சென்னையை நீ
சின்னா பின்னமாக்கியதேனோ?...

பறந்ந கடல் போல பட்டணத்தை
மூழ்கடித்து, இறந்த சடலங்களை
எரிப்பதற்கு இடமில்லாமல்
பிறந்த கை குழந்தையுடன்
பெற்றோர்கள் கதரும் காட்சி
மறக்க முடிய வில்லை மழையே!....
நீ செய்த பெரும் வீழ்ச்சி !....
பொருக்கவும் முடியவில்லை
தமிழ் நாட்டில்   பெரு மழையாய்
பொங்கி எழுந்த உன் சூழ்ச்சி!......

சுனாமி என்ற பேரில் தமிழகத்தை
சுக்கு நூறாக்கி விட்டாய் !....
பினாமியா எம்மக்கள்   தமிழகத்தில் பேரிடரை தருகின்றாய்,
பூகம்பம் என்ற பேரில்
பேரதிர்ச்சி தருகின்றாய்
இயற்க்கையின் சதிக்கொடுமை
இனி வேண்டாம்  தமிழ் தாயே !!!
என்று நாங்கள் வணங்குகின்றோம்
மகா மாரி(அம்மா)உனையே !!!!....


( தமிழ் நாட்டில் 01-12-2015-/04-12-2015 இல் பெய்த பெரு மழை வெள்ள சேதத்தின் போது எழுதியது,)
pattikudikadu r govindharaju
     
          கவிஞர்.பட்டிக்குடிக்காடு
இரா,கோவிந்தராசு
கை பேசி/ 09879042958
இ,மெயில்/
e.mail. Govindharaju 1209@gmail.com
e.mail.pattikudikadurg1205@gmail.com

Sunday, 3 April 2016

"]ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்"

   " ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்"
***************************************
வண்ண நிற பொடிகளை தூவி
வானவில் நிறங்களில் மேனியாக்கி
பெண்ணும் ஆணும் மகிழ்ந்து குலாவி
பேரின்பம் காணும் நன்னாள் ஹோலி!,

மண்ணும் வண்ணமாக்கி
மக்களுடல் சகதியாக்கி
வண்ண வண்ண நீர் தெளித்து
கண்ணை குளிர வைக்கும்
வண்ணம் பூசி விளையாடும்
வருஷத்தில் ஒருநாள் வருகின்ற
பொன்னான திருநாள் ஹோலி!,

தாங்களும் வண்ணம் பூசி
தண்ணீரை உடல் மேலே வீசி
மங்கலம் பொங்க   இன்று
மக்களும்ஒன்றாய் கூடியாடி
மகிழ்ந்திடும்  ஹோலி நாளில்
மனதார வாழ்த்துகின்றேன்
மக்களையும் போற்றுகின்றேன்!.

       அன்புடன்,
கவிஞர்,பட்டிக்குடிக்காடு
இரா.கோவிந்தராசு.
09879042958
e ,mail- govindharaju1209@gmail.com
e.-mail-pattikudikadurg1205@gmail,com 

Saturday, 26 March 2016

" தாய் குலமே தயங்காதே"

     "தாய் குலமே தயங்காதே "
--------------------------------------------------------------
ஆக்கும் சக்தியும் பெண்
அணைக்கும் சக்தியும் பெண்!
காக்கும் கரமும் பெண்
கருணை உள்ளமும் பெண்!
ஊக்கம் தருவதும் பெண்
உயிர் காப்பதும் பெண் !....
கருவை உருவாக்கி,
கற்ப பையை கோவிலாக்கி,
பத்து மாதம் சுமந்தெடுத்து,
பாசமிகு அன்னையாக
பெற்று வளர்ப்பதும் பெண்
பேணிக்காப்பதும் பெண் !,
குற்றம் செயாமலே இங்கு
கொடுமைகள் சுமப்பது பெண் !....
துக்கம்  வாழ்க்கையில் வந்தாலும்
துயரபடாமல் துணிந்து நின்று
துயர் துடைப்பவள் பெண் !.....
தூங்கி எழும் குழந்தையை தன்
தோளில் சுமந்து தூங்க வைக்கும்
தூய உள்ளம் பெண் !.....
வீணை பிடித்தவள் பெ ண்
வீர வாள் பிடித்தவள் பெண் !....
தனம் தருபவள் பெண்
தானம் செய்பவளும் பெண்!.....
மானம் காப்பவள் பெண்
மங்கையர் திலகமாய் பெண் !....
பானை பிடித்தவள் பெண்
பதிவிரதை பத்தினியும் பெண் !.....
தேனையும் மிஞ்சும் திருமேனி
தெய்வ தாயும் ஒரு பெண் !.......
வானையும் தொட்டவள் பெண்
வயலில் உழைப்பவளும் பெண்!......
ஆணையும் படைத்தவள் பெண்
அகிலத்தை படைத்தவள் பெண்!.....
யானையைப்பேல பலமிருந்தும்,
பூனையைப்போல  பதுங்காமல்
சேனைப் படையாய் ஒன்றுதிரண்டு
உலகில்  செயித்து காட்டுவோம்
பலமாய் வா முன்னே!,,.....
சிரம் நிமிர்ந்து உங்கள் கரம் உயர்த்தி ,
சிங்க நடையில் வா பெண்ணே !.  
ஆக்கும் திரனை படைத்த எங்கள்
 அழகு மங்கை புதுமை பெண்களே!.......
காக்கும் கரங்களாய் ஒன்று சேர்ந்து
நம்மை -
தாக்கும் சக்தியை  வீழ்த்திடுவோம் !.
தாய் குலத்தை  காத்திடுவோம் !......

    "  உலக மகளிர் தின நாள்"  விழா

         மங்கையர் மலர்
        "காக்கும் கரங்கள்"
    அகமதாபாத் ,   குஜராத்,
           நாள்-27-03-2016.
             
          அன்பு இதயமுடன்,
கவிஞர். பட்டிக்குடிக்காடு,
இரா,கோவிந்தராசு.
   அழைப்பு, 09879042958
e.mail. Govinndharaju 1209@gmail,com
email.pattikudikadurg1205@gmail,com