Tuesday, 2 December 2014


''தர்ஷீல் குட்டி பிறந்தநாள்
        நல்  வாழ்த்துக்கள் "
 (நான்காம் ஆண்டு  பிறந்த நாள் )     (04-12-2014)
அன்பான செல்வமுத்தே  அழகான பவழமுத்தே
இன்பமான தங்கமுத்தே  எங்கள் வீட்டின் சிங்கமுத்தே,
உன்னைக்கான வேண்டியிங்கு ஒவ்வொருநாள் தவமிருந்தோம்
கண்ணான கண்மணியே -எங்கள்கவலைத்தீர நீ பிறந்தாய்,

முன்னோர்கள் புண்ணியத்தால்  கண்ணாயிங்கு நீ பிறந்தாய்
முத்தான இரத்தினமே -உன்  முகம்பார்த்து மனம்மகிழ்ந்தோம்
தனலட்சுமி ஈன்றெடுத்த  தங்கமான ரோஜாவே
தரணி புகழ் அடைய வேண்டும்  தர்ஷில் எங்கள் இராஜாவே ,

குட்டியப்பார் கிருபையாலே  சுட்டிப்பிள்ளை  நீ பிறந்து
கட்டிமுத்தம் தந்தோமடா  குட்டிமுத்து தவப்புதல்வா
கந்தசாமி  அஞ்சலையின்  சொந்தமான  வாரிசே நீ ,
பந்த பாசம் நிறைந்த -எங்கள் பாசமுள்ள குணசீலா
குட்டியப்பார் அருளாலே எங்கள் குலம்காக்க பிறந்தவனே
பட்டிகுடிக்காட்டு உன் தாய்  தனத்திற்க்கும் பக்கபலம் நீதானே !

அன்னை,தந்தையர்க்கு அருந்தவத்தால் வந்துதித்த
சின்னமணி ச்சுடரே   சிங்கார வடிவேலா
தென்னை மர நிழல் போல  தென்றலாக வீசவேண்டும்
தேவஸ்தான புடையூரில்  திருமாலாய் திகழவேண்டும்
பனை,தென்னை,மரம் போல  பயனாக திகழவேண்டும்
உன்னையீன்ற பெற்றோர்கள்  உள்ளம் மகிழவேண்டும்.!

                       அன்புடன் 
            பட்ட க்குடிக்காடு -இரா கோவிந்தராசு 
அயிலண்டம்மாள் , இராமசாமி ,அஞ்சலை ,கந்தசாமி 
இரா.கோவிந்தராசு கண்ணகி , கோ . இராஜலட்சுமி,கோ . இராகுல் ,
அ .கொளஞ்சி. கொ .செல்வாம்பாள் கொ .சந்தோஷ்குமார்,
 கொ .செல்வகுமாரி , கொ . அருண்குமார்  
மற்றும் ,  அப்பா  க . குட் டி முத்து , அம்மா,  கு. தனலட்சுமி , 
தங்கை   கு, நிகிதா .     
சாபர்மதி,அகமதாபாத் ,குஜராத்------(04-12-2014)