அடர்ந்த ஆலமரம்
அருகில் கல்விக்கூடம்,
படர்ந்த மணல்பரப்பில் ,
படுத்து நான் உறங்கி வந்த,
கடந்தகால நினைவுகளை
இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும்
எப்போதும் நான் மறவேன்
இனிமையான என் ஊரும்
மு .பட்டிகுடிகாட்டின்
அழகான மண்வீடு
புகழான அம்மன்கோவில்
பழங்காலம் தொன்று தொட்டு
உழுத விளை நிலங்கள்
தொடர்ந்து நடந்து சென்றால்
படர்ந்த மலர்செடிகள்
கொல்லைக்கு செல்லும்போது
உள்ளத்தை குளிரவைக்கும்
மல்லிகை முல்லைபூக்கள்
மனம்கமழும் வாசம் தரும்..!
பாலைவன பூமியெல்லாம்
சோலைவன எழில் பொங்கும்
சாலையெங்கும் மாந்தோப்பும்
வாழை மரதோப்பும்
வானளாவும் தென்னை
மரந்தோ ப்பும்,
ஏ ழை களை மகிழ வை க்கு ம்
கா ன கத்து கனி வளமும்
கண் ணைக் குளி ர வைக்க்கும்
தென்னை மர த் தோ ப் பு களும்
என்னிப் பார் க்க முடியாத
இதமான குளுங் கா ற்று ம்
எம் மண்ணின்
பெருமை வாய்ந்த
மகத் தா ன அ ற்புதங்கள்
மா , பலா , வாழை எனும்
முக்கனிகள் விளையுமிடம்
மன்னராலே போற்றப்படும்
முந்திரிகள் காய்க்குமிடம்
கம்பு ,சோளம் ,வரகு
கேழ்வரகும் ,
நெல்லும் ,கொள்ளும் ,
கரு உளுந்து மொச்சைகளும்
விளைந்து களம் குவியும்,
வேம்பு, பூவரசு
விலையுயர்ந்த தேக்குகளும்
நான்கு திசைநோக்கின் ,
நன்மைதரும் மரவளங் கள்
பச்சை காய் கறியும்
பவழம்போல் தக்காளியும்
மொ ச் சை பயிர்வகையும்
எலுமிச்சை கனிகிடைக்கும்
சுக்கு ,மிளகு ,சோம்பு
சுவை சேர் க்கும் கசகசா வும்
திப்பிலி ,கிராம்பு ,ஏலம் ,
இவை நீங்கி ,
வாழைக் குலைத் தள்ளி
தானாய் பழம் பழுக்கும்
சோழ பூமி எங்கள்
சொக்கத்தங்கம் விளையும் ஊரில்
படித்தவர்கள் இங்கே பலருண்டு
அவர்களாலே எங்கள் ஊர்
பட்டிக்குடிகாட்டுக்கு பெருமையுண்டு .
பட்டிக்குடிக்காடு இரா .கோவிந்தராசு
சாபர்மதி , குஜராத் மாநிலம்
தேதி . 11.05.2014