''எங்கள் ஊ ர் மதுரா பட்டியின் வரலாறு ''
அன்னை அகிலாண்டம் தந்தை ப.இராமசாமிக்கும் அருந்தவ புதல்வனாக இவ்வுலகத்திற்கு அறிமுகமான என் அன்னைத் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் மதுரா பட்டிக்குடிக்காட்டில் இயற்க்கை அன்னையின் எழில் வளம் பொங்கும் எல்லா வளங்களும் நிறைந்த இப்புண்ணிய பூமியான தாய் மண்ணுக்கு என் முதல் வணக்கம் .
நான் பிறந்த இப் புண்ணிய பூமியான மதுரா பட்டியின் வரலாற்றை இதன் மூலம் இவ்வுலகத்திற்கு தெரியப்படுத்துவதில் பெரிதும் மனமகிழ்ச்சியடைகின்றேன் .
எங்கள் ஊர் மு.பட்டி என்பது தமிழ் நாட்டில் பழைய தென்னாற்காடு மாவட்டம் இப்போதைய கடலூர் மாவட்டம் ,விருத்தாசலம் வட்டம், முகாசாப்பருரை தலமையாகக்கொண்டு எங்கள் ஊர் மு.பட்டி இருக்கின்றது இவ்வூருக்கு விருத்தாசலத்திலிருந்து சிருவாம்பார் பேருந்து மார்க்கத்தில் முதல் எருமனூர் ,இரண்டாவது தொட்டிக்குப்பம் ,மூன்றாவ்தாக பேருந்து நிருத்தமே (11.கி.மீ.)தொலைவில் எங்கள் ஊர் மு.பட்டி.இருக்கின்றது. இதன் ஒரு பகுதியில் இருப்பது மு.பட்டிக்குடிகாடு .
எங்கள் ஊர் மு.பட்டியின் சுற்றுவட்டார எல்லைகள்
வடக்கில் முகாசாபரூர் ,தெற்கில் தொட்டிக்குப்பம் ,கிழக்கில் வடவாடி ,மேற்க்கில் மு.புதூர் இவ்வுர்களுக்கு மத்தியில் எங்கள் ஊ ர் மு. பட்டி அமைந்துள்ளது.
எங்கள் ஊர் மதுரா பட்டி, இதன் ஒரு பகுதி யான மதுரா பட்டிக்குடிக்காட்டில் நான் பிறந்தேன் என்பதை எண்ணிமுதலில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் .
பிறந்த ஊருக்கு பெருமைத்தேடு என்று சொல்வதுண்டு ,ஒருவரால் நாம் பிறந்த ஊருக்கு பெருமைகள் தேடி தர வாய்ப்புகள் இல்லையென் றாலும் தீமைகள் விளைவிக்க கூ டாது என்று சொல்வார்கள் .
எங்கள் ஊர் வரலாற்றை எனக்கு தெரிந்த வரையில் இங்கே எழுதி தெரிவிக்கின்றேன் .
நாம் வாழும் இந்த உலகத்தில் ஏழு பெரிய கண்டங்களில் ஒன்றானஆசிய கண்டத்தில் இந்திய தேசத்தில் தமிழ் நாட்டில் கடலூர்மாவட்டம் ,விருத்தாசலம் வட்டம் ,முகாசாப்பரூரை தலைமை இடமாகக்கொண்டு சுற்று வட்டார ஊர்களில் ஒன்றான மதுரா பட்டி என்ற எங்கள் ஊர் உள்ளது .இந்த ஊரின் ஒருபகுதியே மதுரா பட்டிக்குடிக்காடு ஆகும் .
மதுரா என்பதின் பொருள் ,பல ஊர்களை இணைத்து அந்த ஊர்களை கட்டிக்காத்து ஆட்ச்சி புரிந்து மக்களைப் பாதுகாத்து வருபவர் இராஜா என்று அழைக்கப்பட்டார். அந்தகாலத்தில் சுற்று வட்டார கிராமங்களை தான் மதுரா என்று அழைக்கப்பட்டது. அதுவே இக்காலத்தில் பேறு ரூராட்ச்சி என்றும், ஊராட்ச்சி என்றும் இப்பொழுது அழைக்கப்படுகின்றது .
எங்கள் மதுரா ஊர்களை ஆண்ட ராஜா வாகிய உயர்திரு வீர சேகர முத்துக்கிருஷ்ண பொன்னம்பல கச்சிராவ் பாளையப்பட்டு ஜமிந்தார் அவர்கள் எங்கள் ஊர்களை அரசாட்ச்சி செய்துவந்தார் . என்பது ஆதார பூ ர்வமான சாட்ச்சியங்கள் இன்றளவும் முகாசாபரூரில் இருக்கின்றது.
அரண்மனை இருந்த இடமும் அங்கே நான்கு பக்கமும் பெரிய மதில் சுவர்களால் கட்டப்பட்ட அதிக விஸ்தாரமான கட்டுக்கோப்பான அரண்மனை. எங்கள் ஊர் சுற்று வட்டாரத்திற்கே உள்ள மிகவும் பெருமை வாய்ந்த இராஜாவின் அரசாட்சியால் எங்கள் ஊருக்கே பெருமை உண்டு.
இராஜாவின் அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மட்டும் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் ஆவார்கள் இங்கே குதிரைகள் ஆடு,மாடுகள் யானைகள் ஒட்டகங்கள் ஏராளம் இவைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் அந்தந்த விலங்கினத்திர்க்கேர்ப்ப பராமரிப்பாளர்கள் இருந்தார்கள் . நிலங்கள் ஏராளம் இருந்தமையால் அந்நிலங்களில் பணிபுரிந்தவர்கள் அவரவர் தகுதிக்கேர்ப்ப பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தது ம் அதன் ஆதாரங்கள் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்னரே இராஜாக்கள் நமது நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அவர்களின் பல தலைமுறை வழியாக எங்கள் ஊ ரில் இராஜ பரம்பரையில் அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இன்றளவும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் எங்கள் ஊருக்கும் எங்கள் சுற்று வட்டார ஊர்களுக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கே பெருமகிழ்ச்சியளிக்கின்றது .
எங்கள் ஊர்களை சுற்றிலும் பெரிய ஏரிகளும் குளங்களும் குட்டைகளும் ஏராளம் . அவைகளில் வற்றாத ஏரியான பெரிய எரி , விருத்தகிரி ஏரி யும் ,நெல்விளையும் பூமியான நஞ்சை நிலத்திற்கு நீர் தருகின்ற ஏரிகளாக விளங்கி வருகின்றன. குளங்கள் ,பெரியக்குளமான செங்குளம் , காஞ்சாராங்குளம் ,இருக்கின்றது .
குட்டைகள் , சாமியார்குட்டை ,கைலாச நாதர் குட்டை, சீத்தக்குட்டை. ஊத்தக்குட்டை என்பது இன்றும் பெயர்கள் மாறாமல் இருக்கின்றது .
ஆறுகளில் ஒன்று இருக்கின்றது அது எங்கள் ஊருக்கு தென்திசையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசை நோக்கி மணிமுத்தாறு என்பது எங்கள் விருத்தாசலம் வட்டத்திற்கே புண்ணிய ஆறாக பாய்கின்றது இந்த புண்ணிய ஆற்றில் . நீராடி விருத்தாசலம் விருத்தகிரீஷ்வர் விருத்தாம்பிகை ஆலயமான பழமலைநாதர் பெரியக் கோவிலைசுற்றி வலம் வந்து வணங்கியவர்களுக்கு பலாப்பலன்கள் இன்றளவும் கிடைக்கபெருகின்றது.
விருத்தாசலம் பழமலைநாதர் பெரியக்கோவில் தலவரலாறு புத்தகத்தில் விருத்தகிரிஸ் வரர் தான் இக்கோவிலை கட்டிமுடித்தவர் என்றும் ,இக்கோவிலை கட்டுவதற்காக எங்கள் ஊர் முகாசாபரூர் பாளயகாரர் பொருளுதவியும் ,பணவுதவியும் கொடுத்துள்ளார் என்பதும்
பொருளுதவி கொடுத்தவர் பெயர் தெரியவில்லை என்றும் தலவரலாறு தெரிவிக்கின்றது.
இக்கோவிலை கட்டிமுடிக்க பொது தொண்டு செய்தவர்களுக்கு பணமாக பொருளாக எதுவும் தராமல் அங்கிருக்கும் வன்னிபத்திரத்தை பரித்து தந்ததாகவும் அதுவே அவரவர் உழைப்புக்கு தகுந்த ஊதியமாக மாறியதாகவும் கோவில் தலவரலாறு தெரிவிக்கின்றது . இக்கோவிலில் உள்ள வன்னிமரத்தின் வயது 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் விருத்தாசலத்தில் ஓடும் மணிமுத்தாறு புண்ணிய ஆறு என்றும் இதுவே காசிக்கு வீசம் என்றும் கோவில் தலவரலாறு தெரிவிக்கின்றது. இவ்வளவு பெரிய உலக வரலாறு படைத்த பெரியக்கோவிலை கட்டுவதற்கு எங்கள் ஊர் ராஜ பரம்பரையிலிருந்து உதவிபுரிந்துள்ளார்கள் என்பதும் எங்கள் ஊர் முகாசாபரூர் சுற்றுவட்டார மக்களுக்கே பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. .
ஓடைகள் , வீரிய மடுவு உள்ளது இது மேற்கே சாத்தனுரிலிருந்து ஆரம்பித்து கிழக்குதிசையாக பாய்ந்து எங்கள் ஊர் பட்டி இரயில்வே பாளம் கடந்து மணிமுத்தாற்றில் கலக்கின்றது . இந்த வீரியமடுவில் ஏற்றம் ஓடி நீரிறைத்து அனைத்து வித விவசாயப் பயிர்களிட்டு பயிர்கள் களம்குவிந்தது ஏரிபாசனமும், வாய்க்கால் பாசனத்தாலும் அக்காலத்திலும் இக்காலத்திலும் விவசாயம் பெருகி லாபம் அடைந்து வருகின்றது.
எங்கள் ஊரில் விவசாயம் முக்கியத்தொழிலாக நடைபெருகின்றது கால்நடைகள் ஆடுகள்,மாடுகள் பெரிதும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படுகின்றது இங்கே வளர்க்கும் பசுவையும் எருதுகளையும் தெய்வமாக வணங்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. இங்கே தெய்வ பக்தி பரவசம் அனைவரிடமும் இருந்து வருகின்றது.
எங்கள் ஊரில் கோயில்கள் (1) பிள்ளையார்கோயில் (2)படவேட்டையம்மன். கோயில் (3)மன்மதன்கோயில் (4)மகாமாரியம்மன் கோயில், (5) நடுகாட்டம்மன் கோயில் (6)பெரியநாயகியம்மன் கோயில் (7)ஹனுமான் கோயில் (8)ஆனந்தாயியம்மன் கோயில் போன்ற தெய்வஆலயங்கள் இங்கே இருக்கின்றது மேலும் அவரவர் குலத்தெய்வங்க்களை வணங்கி வழிப்பட்டு வருகின்றார்கள்.
எங்கள் ஊரின் மிக முக்கிய பண்டிகைகள் பொங்கல் பண்டிகை ,தீபாவளி பண்டிகை, சனிவார விரதம், ஆடி பூரம், தைபூசம், ஏகாதசி விரதம், பிள்ளையார் சதுர்த்தி, நம் தமிழகத்தில் அனைவராலும் வணங்கப்படும் அழகன் முருக கடவுளுக்கு பங்குனி உத்திர திருவிழாவும் வெகு விமர்சையாக காவடி எடுத்து வீதிவுலா வரும் பங்குனி உத்திர திருவிழா வில் அலகு போடுதலும் ,பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ச்சியடைந்து கொண்டாடும் உத்திரத் திருவிழாவும் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள தெய்வங்களுக்கும் பத்துநாட்கள் ,ஐந்து நாட்கள் திருவிழாக்களும் சிறப்புடன் நடைபெற்றுவருகின்றது.
எங்கள் ஊரிலும் ,மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் பாரம்பரியம் மிக்க நாட்டுபுற கலை நடன நிகழ்ச்சியான பெண்ங்களுக்கான ஆவாரம் கொட்டுவது (ஆவார நடனம் ஆடுவது ) ஒவ்வொரு திருவிழாவிலும் ஆண்களை மிகவும் ரசிக்க வைக்கும் நடனமாகும், கிளிபாரி இஸ்காபாரி, பாண்டியம் விளையாடுவது ,கண்ணைக்கட்டி விளையாடுதல் போன்ற விளையாட்டுக்கள் பெண்களின் விளையாட்டுகளாகும். ஆண்களின் முக்கிய விளையாட்டாக கோலாட்டம்,சிலம்பாட்டம்,கபடியாட்டம்,மல்யுத்த குத்துச்சண்டை விளையாட்டும் , மக்களுக்கு அறிவுரை புகட்டும் ,உண்மை உணர்வும் ,பொய்கள் பேசாமலும் ,சத்தியவாதிகளாக வாழ்வதற்கு வழிகாட்டியாக விளங்கும் நாடகங்களான வடக்கத்திய நாடகமான தெருக்கூத்துக்களும், கலை நடனங்களான இராஜா அரிச்சந்திரா, ராம நாடகம் சனிவாரவிரத நாடகம், ரதி - மன்மதன் காதல் நாடகங்களும் எங்கள் ஊரின் முக்கிய கலை நிகழ்ச்சிகளாகும் .
நிலங்களில் பயிரிடப்பட்ட முதல் தானியங்களை தெய்வங்களுக்குபடைத்த பிறகே தாங்கள் உண்ணும் பழக்கத்தை இன்றும் நடைமுறையில் இருந்துவருகின்றது .
எங்கள் ஊர்களில் விளையும் விவசாய பொருள்கள் மானம் பார்த்த விவசாய பொருள்களான நெல்,கம்பு,சோளம் ,வரகு,கேழ்வரகு, தினை , மற்றும் அனைத்தது ரக தானியவகைகளும் பயிர்வகைகளான பச்சைபயிர், தட்டைப்பயிர், மொச்சைகொட்டை உளுந்து, துவரை ,அவரை ,எள்ளும் ,கொள்ளும் விளைந்து களம் குவியும் . வேர்கடலை, கரும்பு, பெரும் விவசாயப் பயிர்களாக பயிரிடப்பட்டு வருகின்றது.
கனி வகைகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், எலுமிச்சைபழம், கொய்யாப்பழம், ஆரஞ்ச்பழம், மாதுளம்பழம்பழம் ,சாத்துக்குடிபழம் நாவல்பழம்,முந்திரிக்கொட்டை பருப்பும் அதிகமாக இங்கே சாகுபடிசெய்யப்படுகின்றது..
இங்கே விலைவுயர்ந்த மரங்களான தேக்குமரம், பலாமரம், பூவரசமரம் வேப்பமரம், வளர்க்கப்படுகின்றது. காட்டு மரங்களான கருங்காலி, வேலமரம் நாட்டுக்கருவை, பொரிச்சிமரம், துறிஞ்சி, வாகைமரம், நொணாமரம், பனைமரம், தென்னைமரம், அத்திமரம், வன்னிமரம், பேரீச்சைமரம், போன்றமரங்கள் எங்கள் ஊரில் அதிகமாக வும், முழிங்கில்மரமும் கிடைக்கின்றது .
ஆக மொத்தத்தில் எங்கள் ஊர் மதுரா பட்டியில் சுற்று வட்டாரத்தில் காடுகள் அதிகபரப்பளவில் நிலங்களிலும், அனைத்துவகைத் தானியப்பொருள்களும், பயிர்வகைகளும், பழவகைகளும், மரவகைகளும், மற்றும், கானகத்து கனி வகைகளும், தென்னைமரங்களும், புளியந் தோபுகளும், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.
எங்கள் ஊரிலும் ,எங்கள் சுற்றுபுற கிராமங்களான முகாசாப்பரூர், கோணாங்குப்பம், மு.புதூர், சின்னப்பரூர், மு,பட்டி, தொட்டிக்குப்பம். சிவனார்குப்பம், ஆகிய எங்கள் ஊர்களில் படித்த பட்டத்தாரிகளும், அதிகமாக இருக்கின்றார்கள் அதிகமான பேர்கள் அரசாங்க அதிகாரிகளாகவும், ஆசரியர்களாகவும் வழக்குரைஞ்சர்களாகவும் .,இந்திய இரயில்வே துறை யில் பணிபுரிவோர்களும் மிகவும் ஏராளமாக இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் பொழுது எங்கள் ஊர் தங்கம்போட்டால் தங்கம் விளையும் சொக்கத் தங்கம் விளையும் சோழப் பூமியாக விளங்குகின்றதை எண்ணி
ஆனந்த பெருமழ்ச்சியடைகின்றது.
எங்கள் ஊரில் எல்லாவளங்க்களும் நிறைந்து காணப்பட்ட போதிலும் ,ஏதாவது குறைகள் இல்லாமல் இருக்குமா என்று எண்ணியபொழுது மிகவும் முக்கியமான பெரும்குறைகள் ஒன்று இருக்கின்றது, எங்கள் ஊரில் காட்டு நிலப்பகுதியில் அதிகம் நாட்டுமருந்துகளான மூலிகை தாவரங்கள் கிடைக்கின்ற காரனத்தினாலியோ என்னவோ ,எவ்வித நோயாக இருந்தாலும் நாட்டுமருந்துகளினால் குணப்படுத்திய காரணத்தாலேயே என்னவோ எவ்வளவோ பட்டத்தாரிகள் இருந்தும் எல்லாதுறைகளிலும் பணிபுரிந்தும், எங்கள்சொந்த ஊரிலிருந்து ஒரு மருத்துவர் (டாக்டர்பட்டம்வாங்கி) பட்டம் வாங்கிய மருத்துவர் ஆகவில்லையே என்ற பெரிய குறைகள் இன்று வரை எங்கள் ஊரில் இருந்து வருகின்றது என்பது மனதுக்கு கஷ்ட்டமாக இருக்கின்றது , இந்த குறையை நிவர்த்தி செய்ய எப்பொழுது யார்தான் வருவாரோ. என்ற ஏக்கம் இன்றளவும் இருந்து வருகின்றது.
எங்கள் ஊரில் படித்தவர்கள் அதிகம் இருந்தபோதிலும் நான் நன்றாக அரிந்தவர்களைப்பற்றி இங்கே சில பேர்களையும் அவர்களால் எங்கள் ஊருக்கு பெரும்புகழ் அடைந்ததையும் இங்கே சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன் .
(1)ஆசரியர்கள் திரு இரங்கசாமிஆசரியர் ,முள்ளுகுரிச்சி ஆசரியர் கணேசன் ஆசரியர் , முத்துவேல் நயினார் ,வடிவேல் நயினார்,இவர்கள் ஐந்துபேர்களும் பழைய ஆசரியர்களாவர் . எங்களைப் போன்றவர்களுக்கு படிதுக்கொடுத்த ஆசரியர்களாவர் .இந்த ஆசாரியர்களிடம் பயின்றவர்களில் அதிகம்பேர்கள் பட்டங்கள் பெற்று எங்கள் ஊரில் உள்ளார்கள். அவர்களில் இப்போது பட்டத்தாரி ஆசரியராக பணியாற்றிக்கொண்டு இருக்கும் திரு க. கணேசமூர்த்தி அவர்கள் எங்கள் ஊரிலேயே முதல் முதலாக அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஆசரியராக விளங்குவதில் மகிழ்ச்சி அளிக்கின்றது மற்றும் க.கணேசமூர்த்தியின் மனைவியாகிய திருமதி வாசுகி கணேசமூர்த்தி ஆசரியை பட்டத்தாரி ஆசரியையாக விளங்குவதிலும் எங்கள் ஊரில் முதல் பெண் ஆசரியையாக விளங்குவதிலும் மகிழ்ச்சி அளிக்கின்றது.
(2)மு.பட்டியைச் சேர்ந்த திரு சு. செங்குட்டுவன் அவர்கள் எங்கள் ஊரிலேயே முதல்முதலாக முனைவர்பட்டம் பெற்று பேராசரியராக வும்எங்கள் ஊரின் பெயரை இந்த உலகத்திற்க்கு அவர்களின் எழுத்தாற்றல்மூலமாகவும் புத்தகம் மூலமாகவும் மு.பட்டி என்ற எங்கள் ஊரை வெளி உலகத்திற்க்கு எடுத்து காட்டிய பெருமை யால் திரு சு.செங்குட்டுவன் அவர்களுக்கு எங்களஊர்மக்கள் அனைவர்களாலும் பாராட்டுக்குரிய மாமனிதராகவும், எங்கள் ஊரின் மிகச்சிறந்த கவிப்புலவராகவும் விளங்குவதால் எங்கள் ஊருக்கே பெருமை அளிக்கின்றது.
இவர் எழதிய புத்தகங்கள் படிப்பதற்கும் ,பகுத்தறிவிற்கும் பயனளிக்கும் விதத்தில் , உள்ளன்பும் உணர்வு மிகுந்த சிந்தனை யாற்றல்
கொண்ட நல்லேடுகளால் நாட்டு பற்றும் ,ஊர்பற்றும் கொண்ட உன்னத மாமேதையாக புத்தக வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்கள் இவர் தம் படிப்பு ஆற்றலால் பிறந்த ஊருக்கு பெருமைத் தேடிதந்த பெருங் குடிமகனாவார் திரு சு. செங்குட்டுவன் அவர்களுக்கு எங்கள் மு. பட்டியின் மக்களின் சார்பாக நன்றியுடன் பாராட்டையும் இதன் மூலம் தெரிவிக்கின்றோம்.
(3) சா. நடராஜவேல் (மணி) இவர் தான் எங்கள் ஊர் மு.பட்டியிலேயே அதிகம் பட்டங்கள் பெற்ற அதிகாரியாக விளங்குகின்றார் . அதாவது டாக்டர் பி .ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பிறகு எங்கள் ஊரில் அதிக பட்டங்கள் பெற்று அதிகாரியாக விளங்குகின்றார் இவரால் எங்கள் ஊருக்கே பெருமை. இவர் மனைவியும் இவருக்கு சமமாக பட்டங்கள் பெற்று ஆசரியையாக பணி புரிகின்றார் என்பதும் ஊருக்கே பெருமையளிக்கின்றது .
(4) மு .பட்டி திரு கே.இருசப்பன் அவர்கள் பட்டத்தாரியான முதல் கிராம நிர்வாக அதிகாரி ஆவார் இதற்க்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த வர்களே எங்கள் சுற்று வட்டாரத்தில் கிராம நிர்வாக அதிகாரிகளாக பணி யாற்றியுள்ளார்கள் .ஆனால் பட்டம்பெற்ற முதல் கிராம நிர்வாக அதிகாரி என்ற பெருமைக்குரிய வர் தான் திரு கே .இருசப்பன் ஆவார்கள்.இதற்க்கு முன் காலத்தில் பாம்பரை மணியம் வேலை க்கு தகுதியானவர்களாக எங்கள் ஊர் மு.பட்டியை சேர்ந்தவர்களே இருந்தார்கள் என்பதற்கு இன்றும் ஆதாரங்கள் உள்ளது.
கர்ணம் வேலை பார்த்தவர்கள் கர்னத்தம் என்ற ஊரில் இருக்கின்றார்கள் .கர்ணம் வேலை பார்த்தவர்கள் இருந்த ஊர்தான் கர்னத்தம் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றது.
(5)எங்கள் ஊர் மு.பட்டி என்ற பெயரை இந்த உலகத்திற்குஅறிமுக படுத்தி வரும் முக்கிய நபர் தான் திரு ஆர் .திருமூர்த்தி அவர்கள் .இவர் இந்திய சினிமா துறையில் பிரபலமாகிவரும் ,நட்ச்சத்திரங்களை போல் இவரும் பிரபல கேமரா மேனாக புகழப்பெற்று வருகின்றார் என்பதால் நமக்கும்,நமது ஊருக்கும் பெருமைப்படகூடிய விஷயமல்லவா. இவருடைய தந்தை திரு ரெங்கநாதன் அவர்களும் நமது சுற்று வட்டார ஊர் மக்களிடம் பெரும் புகழ் பெற்றவர் ஆவார் அதாவது நமது தமிழருடைய பாரம்பரை கலையான சிலம்பம்,குத்துச்சண்டையான வீர விளையாட்ட்களில் மிக சிறந்த ஆசாரியராக விளங்கினார் என்பதில் நமத ஊருக்கு பெருமையல்லவா.திரு ரெங்கநாதன் அவர்களுக்கு குருவாக ,சிலம்ப ஆசாரியராக விளங்கியவர்கள் திரு மு.வேலாயுதம் ஆகும் என்பதும் இங்கே குரிப்ப்டிதக்கது.
இவரைப் போன்று நமது ஊரில் இன்னமும் எவ்வளவோ பட்டதாரி கள் இருக்கின்றனர்.அவர்களாலும் நமது ஊருக்கு பேரும்புகழும் ,கிடைக்கின்றது.அதில் திரு.டி.ராமலிங்கம் தமிழ் நாட்டில் படித்து பட்டதாரியாகி குஜராத் மாநிலத்தில் சென்று எஞ்சினி யராகி அவரால் இன்று எவ்வளவோ படித்த இளைஞ்சர்கள் பணியில் அமர்ந்து பயனடைந்து வருகின்றார்கள்.என்பதால் அவருக்கும் பெருமை ,அவரால் நமது ஊருக்கும் பெருமையல்லவா. இவர்களைப்போன்று இன்னமும் எவ்வளவோ படித்த பட்டதாரிகளால் நமது ஊருக்குபேரும் புகழும் ,கிடைத்துக்கொண்டு இருக்கின்றது என்பதால் நாம் அனைவரும் பெருமை படவேண்டிய விஷயமல்லவா.
கர்ணம் வேலை பார்த்தவர்கள் கர்னத்தம் என்ற ஊரில் இருக்கின்றார்கள் .கர்ணம் வேலை பார்த்தவர்கள் இருந்த ஊர்தான் கர்னத்தம் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றது.
(5)எங்கள் ஊர் மு.பட்டி என்ற பெயரை இந்த உலகத்திற்குஅறிமுக படுத்தி வரும் முக்கிய நபர் தான் திரு ஆர் .திருமூர்த்தி அவர்கள் .இவர் இந்திய சினிமா துறையில் பிரபலமாகிவரும் ,நட்ச்சத்திரங்களை போல் இவரும் பிரபல கேமரா மேனாக புகழப்பெற்று வருகின்றார் என்பதால் நமக்கும்,நமது ஊருக்கும் பெருமைப்படகூடிய விஷயமல்லவா. இவருடைய தந்தை திரு ரெங்கநாதன் அவர்களும் நமது சுற்று வட்டார ஊர் மக்களிடம் பெரும் புகழ் பெற்றவர் ஆவார் அதாவது நமது தமிழருடைய பாரம்பரை கலையான சிலம்பம்,குத்துச்சண்டையான வீர விளையாட்ட்களில் மிக சிறந்த ஆசாரியராக விளங்கினார் என்பதில் நமத ஊருக்கு பெருமையல்லவா.திரு ரெங்கநாதன் அவர்களுக்கு குருவாக ,சிலம்ப ஆசாரியராக விளங்கியவர்கள் திரு மு.வேலாயுதம் ஆகும் என்பதும் இங்கே குரிப்ப்டிதக்கது.
இவரைப் போன்று நமது ஊரில் இன்னமும் எவ்வளவோ பட்டதாரி கள் இருக்கின்றனர்.அவர்களாலும் நமது ஊருக்கு பேரும்புகழும் ,கிடைக்கின்றது.அதில் திரு.டி.ராமலிங்கம் தமிழ் நாட்டில் படித்து பட்டதாரியாகி குஜராத் மாநிலத்தில் சென்று எஞ்சினி யராகி அவரால் இன்று எவ்வளவோ படித்த இளைஞ்சர்கள் பணியில் அமர்ந்து பயனடைந்து வருகின்றார்கள்.என்பதால் அவருக்கும் பெருமை ,அவரால் நமது ஊருக்கும் பெருமையல்லவா. இவர்களைப்போன்று இன்னமும் எவ்வளவோ படித்த பட்டதாரிகளால் நமது ஊருக்குபேரும் புகழும் ,கிடைத்துக்கொண்டு இருக்கின்றது என்பதால் நாம் அனைவரும் பெருமை படவேண்டிய விஷயமல்லவா.
(6) வழக்குரைஞ்சராக இரண்டு பேர்கள் இருக்கின்றார்கள் (1)திரு ரெங்கசாமி ஆசரியர் மகன் விருத்தாசலம் நீதி மன்றத்தில் வழக்கறிஞ்சராக பணியாற்றுகின்றார் , (2) மு .பட்டிக்குடிக்காடு திரு க.சக்திவேல் அவர்கள் பட்டிக்குடிக்காட்டில் பிறந்து சென்னையில் வழக்கறிஞ்சர் முதுகலை பட்டம்பெற்று தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சராக பணியாற்றி வருகின்றார்.இவர்களால் எங்கள் ஊருக்கு பேரும்புகழும் அடைந்து வருகின்றது.
(7) மு.பட்டிக்குடிகாடு திரு க.பெரியசாமி அவர்கள் எம் இ பட்டம் பெற்று இயந்திர பொறியாளராக தமிழ் நாட்டிலும் இந்திய மாநிலங்களிலும் மற்றும் அந்நிய தேசங்களிலும் சீனியர் எந்திர பொறியாளராக பணியாற்றி வருகின்றார் . என்பது ஊருக்கு பெருமை தேடி தருகின்றது . மேலும் இவர் கோயம்பத்தூரில் எஞ்சினியர் பட்டப்படிப்பு படித்துகொண்டு இருக்கும்போது எங்கள் ஊரில் ஆழ் துளையிலிருந்து தண்ணீர் எடுக்கும் நீர் மோட்டார் பம்ப் செட் கோயம்பத் தூரிலிருந்து வரவழைத்து முதல்முதலில் நிலத்தடி நீரை எடுத்து நிலத்துக்கு நீர்பாய்ச்சி பயிர் சாகுபடி செய்து காட்டிய பெருமை திரு
க.பெரியசாமி அவர்களை பாராட்டி யாக வேண்டும் .
(8) மு.பட்டிக்குடிக்காடு கவிஞர் திரு மு.கதிர்வேல் அவர்கள் மு.பட்டிக்குடிகாட்டில் பிறந்து பாமர மக்களின் மத்தியில் பட்டத்தாரியல்லாத கவி பெரும்புலவர் ஆவார்.இவரால் எங்கள் மு.பட்டிக்குடிக்காடு ஊர் பெயரை முதல்முதலில் ஆல் இந்திய வானொலியில் உலகமரிய ஒலிபரப்பிய பெருமை, உலகமக்கள் மத்தியில் சென்னையிலிருந்து பொதிகை தொலைக்காட்ச்சி யின் மூலமாக பிறந்த ஊரின் பெருமையை இவ்வுலகிற்கு தொலைக்காட்ச்சி மூலம் ஒளிபரப்பி பிறந்த ஊருக்கு பெருமை தேடித்தந்த கவிஞர் திரு மு. பட்டிக்குடிக்காடு மு.கதிர்வேல் அவர்களுக்கு எங்கள் ஊர்
பட்டிக்குடிகாடு அனைத்து மக்கள் சார்பாக நன்றி பாராட்டுக்குரியவர் .இவருக்கு சரஸ்வதி அன்னை நாவில் குடியிருப்பதால் இவரின் நல்லபேச்சாற்றலும், பாட்டுகள், பாடுவதிலும், கவிதைகள், எழுதுவதிலும், வல்லவராக விளங்குகின்றார் . இவர் 25 ஆண்டுக்கு முன்பே பாண்டிச்சேரி வானொலி யின் மூலமாகவும் .
தமிழ் நாட்டின் சென்னையில் பொதிகை தொலைக்காட்ச்சியில் வயலும்,வாழ்வும் என்ற கிராமப்புற நாட்டுபுற நிகழ்ச்சியில் இவருடைய சொந்த முயற்ச்சியின் மூலமாக நமது ஊர்களின் பெயர்கள் உலகம் முழுவதும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொண்டுசேர்த்த பெருமை திரு கவிஞர் பட்டிக்குடிகாடு மு.கதிர்வேல் அவர்கள் .
இவர் இப்பொழுது பிரசித்திப்பெற்ற ஜோதிட வித்வானாக வும் ,இவரை சித்தர் என்றும் மக்கள் அழைக்கின்றார்கள் .இவரைப்போன்று இன்னும் பல இளைஞ்சர்கள் நமது ஊரில் ஊர்பற்றும்,நாட்டுப்பற்றுக்கொண்டவர்களாக உருவாகவேண்டும். எனவே திரு கவிஞர் மு. கதிர்வேல் அவர்களுக்கு நமது ஊர் மக்கள் சார்பாக நன்றியும்,பாராட்டுகளையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
(9)கீழே குறிப்பிட்டுள்ள எங்கள் ஊர் பட்டத்தாரிகள் அவர்களின் பதவிகள்
1)தி .இராமலிங்கம் உதவி தாசில்தார் அவர்களும் விருத்தாசலத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று ள்ளார்கள் .
2)பி .அமர்தலிங்க ம் சீனியர்ஆடிட்டர் அதிகாரியாக பணிபுரிந்து விருத்தாசலத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள்.
3) திரு பி. வேலு மயில் எம்.டி பொது மேலாளர் இந்திய இராணுவ துறையில் இந்தியாவிலுள்ள பெருநகர (ஆர்மி ) மிலிட்டரி கேம்ப் களில் திரு பெ.வேலுமயில் பொது மேலாளராகவும்,இவருடைய துணைவியாருமான திருமதி வேலுமயில் அவர்களும் பணிபுரிந்தும் வருகின்றார்கள் என்பதும் குறிப்படத்தக்கது.
4)திரு . க .வச்சிரவேல் எம் ஏ பட்டத்தாரி யுனிட்டேட் இந்தியா இன்சுரன்ஸ் மேலாளர் பதவியில் நெய்வேலியில் பணியாற்றி இப்போது உளூந்தூர்பேட்டையில் .யுனைட்டட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனியின் நிர்வாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார் என்பதால் நமது ஊருக்கு பெருமையல்லவா.
5)பி. பாலகிருஷ்ணன் எம் எஸ் ஸி . பி டபள்யு டி அதிகாரியாக சென்னை தலைமை செயலகம் .அரசாங்க அதிகாரியாக விளங்கி வருகின்றார் என்பதில் நமது ஊருக்கு பெருமையல்லவா.மேலும் இவருடைய மூத்த சகோதரர் திரு பி.வீர ராமசந்திரன் அவர்கள் பி.எஸ் .ஸி பட்டம் பெற்று எஞ்சினியராக இந்தியா,மற்றும் அந்நிய தேசங்களில் சென்று பணியாற்றிக் கொண்டு பெற்றவர்களுக்கு பெருமைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் நமது ஊருக்கும் பெருமைச் சேர்ப்பதும் நமக்கு பெருமையல்லவா.
6) மு ,புதூர் என்னுடன் படித்தஅருமை நண்பர் திரு கே. காமராஜ் அவர்களைப்பற்றி நான் இங்கே எடுத்துக் கூற விரும்புகின்றேன் .திரு கே. காமராஜ் அவர்களுக்கும் எண்கள் ஊர் மதுரா மு.பட்டிக்குடிக்காட்டிர்க்கும் ,மதுரா மு.புதூருக்கும் மிக முக்கிய தொடர்புகள் உள்ளதுகுறிப்பிடத்தக்கது. அதுதான் பிறப்பு உறவு.திரு கே.காமராஜ், மற்றும் எம்..காமராஜ்,இருவருமே எங்கள் ஊருக்கு வேண்டிய தாய் பிறந்த மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள்.கே.காமராஜ் தந்தை திரு கணக்கன் என்பவரின் துணைவியார் திருமதி சம்புர்ணம்மாள் பிறந்தஊரும்,திரு முனியன் என்பவரின் துணைவியார்திருமதி முல்லியாம்பாள்
பிறந்த ஊரான எங்கள் ஊர் பட்டிக்குடிக்காட்டுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்களாவார்கள். திரு.எம்.காமராஜ் அவர்கள் தனது பட்டப்படிப்பை முடித்து தாய் பிறந்த ஊரான மதுரா மு. பட்டிக்குடிக்கட்டில் ஆசாரியராக நியமனமாகி பணிபுரிந்தார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமல்லவா.
பிறந்த ஊரான எங்கள் ஊர் பட்டிக்குடிக்காட்டுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்களாவார்கள். திரு.எம்.காமராஜ் அவர்கள் தனது பட்டப்படிப்பை முடித்து தாய் பிறந்த ஊரான மதுரா மு. பட்டிக்குடிக்கட்டில் ஆசாரியராக நியமனமாகி பணிபுரிந்தார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமல்லவா.
திரு க .காமராஜ் அவர்கள் தனது பள்ளிப்படிப்பை முகாசாபருரில் முடித்துக்கொண்டு பம்பாய் சென்று தனது சகோதரர் வீட்டில் தங்கி பட்டபடிப்பை முடித்து தனது சொந்த முயற்ச்சியால் இந்திய இரயில்வே துறையில்பணியில்குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆர்.ஆர்,பி.மூலம் தேர்வில் அமோக வெற்றிப்பெற்று ரத்லாம் இரயில்வே கோட்டத்தில் பணி நிரந்திரமாகி பணிபுரிந்து பிறகு அங்கிருந்து மாற்றமாகி , இன்று தென்னிந்திய இரயில்வே சென்னை பொது மேலாளர் அலுவலக சீனியர் பர்சனல் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு நமது கடலூர் மாவட்டத்திலேயே நமது சுற்றுவட்டார ஊர் மக்களுக்கும் நமது தமிழ் நாட்டுமக்களுக்காக இரயில்வே துறையைச்சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் பாச உணர்வோடு உதவி புரிந்துக்கொண்டு இருப்பது நமது சுற்றுவட்டார ஊர்களுக்கும் ,மக்களுக்கும் பெருமை அளிக்கின்ற வி ஷயமல்லவா/?
.திரு க .காமராஜை போல,திரு.எம். காமராஜ் போல, நமது ஊரில் பட்டம் படித்த அனைவரும் பெரிய அதிகாரிகளாகி தான் கஷ்ட்டப்பட்டு வளர்ந்திருந்தாலும் மற்றவர்கள் கஷ்ட்டங்கள் நீக்கி பொதுத்தொண்டு செய்திட வேண்டும் .என்று வேண்டிக்கொண்டு திரு க .காமராஜ் அவர்களுக்கு நமது சுற்றுவட்டார அனைத்து மக்களின் சார்பாக நன்றி கலந்த பாராட்டுகளை இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர்களைப்போன்று இன்னும் எவ்வளவோ பட்டத்தாரிகள் எங்கள் ஊரில் அரசாங்க பதவிகளிலும் இரயில்வே துறைகளிலும், இந்திய இராணுவ வீரர்களாகவும், தனியார் துறைகளிலும் அதிகாரிகளாகவும் ,பணியாளர்களாகவும், பொறுப்புணர்வோடு பணியாற்றி எங்கள் ஊருக்கு பேரும் புகழும் தேடித்தந்து பசவுணர்வோடும் ஒற்றுமையோடும் எங்கள் ஊர் மதுரா பட்டி , மு. பட்டிக்குடிகாடு மக்கள் அனைவரும் அன்றும், இன்றும் நல்ல புகழுடன் எங்கள் சுற்றுவட்டார ஊர் மக்களுடன் ஒற்றுமையுடனும் பாசவுனர்வோடும் உறவு முறை கள் மாறாமல் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்ற எங்கள் ஊர் வரலாற்றை இதன் மூலம் இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டி மனம் மகிழும் அன்பன்.
மு பட்டிக்குடிக்காடு இரா.கோவிந்தராசு
சாபர்மதி ,அகமதாபாத், குஜராத் மாநிலம்
தேதி .22.06.2014
(மேலே உள்ள விபரங்கள் நான் அறிந்தவை மட்டும் ,இன்னும் நான் அறியாதவை எவ்வளவோ சிறப்பம்சங்கள் இருக்கின்றது .எனவே நம் ஊரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்ததொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .)(09879042958)
நன்றி வணக்கம் .